இளைஞரைக் கொன்று அவர் தலையை வைத்து பந்து விளையாடிய கொடூர கொலைகாரன்... மக்கள் வரிப்பணத்தில் சொகுசாக வாழ்க்கை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

அவுஸ்திரேலியாவில் ஒரு இளைஞரைக் கொன்று அவரது தலையை வந்து பந்து விளையாடிய ஒரு நபர், பிரித்தானியாவில் சொகுசாக வாழ்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2005ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் Morgan Jay Shepherd (17) என்ற இளைஞனுடன் James Patrick Roughan என்பவரும் Christopher Clark Jones (36) என்பவரும் தங்கியிருந்துள்ளனர்.

குடிபோதையில் நடந்த வாக்குவாதம் ஒன்றின்போது Morganஐ கத்தியால் குத்தியுள்ளனர் மற்ற இருவரும்.

பின்னர் 133 முறை அவரைக் கத்தியால் குத்திக்கொன்றதோடு, அவரது தலையை வெட்டி அதை வைத்து பந்து விளையாடியுள்ளதோடு, அதை பப்பெட் ஆகவும் பயன்படுத்தியுள்ளனர் இருவரும்.

அந்த காலகட்டத்தில் அவுஸ்திரேலியாவையே அதிரவைத்தது இந்த கொலை. இந்த கொடூர செயலுக்காக, சிறையிலேயே Jones உயிரிழக்கவேண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 15 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குப்பிறகு விடுவிக்கப்பட்ட அவர் பிரித்தானியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

இந்நிலையில், Jones சொகுசு ஹொட்டல் ஒன்றில் மக்கள் வரிப்பணத்தில் வாழ்ந்துவருவது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் வாழ்ந்தாலும், Jones அவுஸ்திரேலிய குடியுரிமை பெறவேயில்லை என்பதால், அவர் பிரித்தானிய குடிமகன் என்ற முறையில் பிரித்தானியாவுக்கு நாடுகடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது..

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்