பிரித்தானியாவில் வரும் நாட்களில் இது கட்டாயமாக்கப்படலாம் மக்களே! அரசு அறிவிக்கவுள்ளதாக தகவல்

Report Print Santhan in பிரித்தானியா
1098Shares

பிரித்தானியாவில் கடைகள் மற்றும் வரையறுக்கப்பட்ட இடங்களில் விரைவில் முகக்கவசம் கட்டாயமாக இருக்கக் கூடும், இந்த அறிவிப்பு எதிர் வரும் நாட்களில் அரசாங்கம் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் 288,953 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது வரை 44,798 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மருத்துவமனைகள் மற்றும் இங்கிலாந்தின் பொது போக்குவரத்துகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

(Picture: PA)

இதைத் தொடர்ந்து நாட்டில் இன்னும் ஊரடங்கு எளிதாகும் போது, மக்கள் இயல்பான வாழ்க்கை திரும்பும் போது, குறிப்பிட்ட பகுதிகளில் முகக்கவசம் தேவைப்படும், கட்டாயமாக்கப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் மக்களிடம் கூறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில், இப்போது அதிகமான மக்கள் வேலைக்கு சென்று வருகிறார்கள். இதனால் பிரதமர் தங்கள் வீடுகளுக்கு வெளியே இருக்கும்போது மக்கள் என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பத்தைத் தீர்ப்பதற்கான அதிக அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

எனவே, கோடைக்கால இடைவெளி தொடங்குவதற்கு முன்பு பாராளுமன்றத்தின் மூலம் புதிய வழிகாட்டுதல்களை முன்வைக்க அவருக்கு இப்போது சில நாட்கள் அவகாசம் உள்ளது.

(Picture: PA)

அவசரகால சட்டத்திற்கான மாற்றம் ஸ்காட்லாந்தில் பின்பற்றக் கூடும் என்று கூறப்படுகிறது. அங்கு ஏற்கனவே கடைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த வெள்ளிக் கிழமை, போரிஸ் ஜோன்சன், பொதுவாக சந்திக்காத நபர்களைச் மக்கள் சந்திக்கும் வரையறுக்கப்பட்ட இடங்களில் முகக் கவசம் அணியுமாறு மக்களை வற்புறுத்துவதில் நாங்கள் கடுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பதாகவும், மக்கள் கடைகளில் முகக்கவசங்கள் அணிந்திருப்பதை உறுதி செய்வதற்கான வழிகளை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்