பிரித்தானியாவில் பிரபல கால்பந்து வீரர் குறித்து இனவெறியை தூண்டும் வகையில் சமூகவலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்ட 12 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
Wilfried Zaha என்ற கால்பந்து வீரரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் இந்த பதிவுகள் வெளியிடப்பட்டன.
அதில், நாளைய போட்டியில் நீ சரியாக விளையாடதே கருபினத்தவனே, அப்படி செய்யாவிட்டால் பேய் உடையணிந்து உன் வீட்டிற்கு வருவேன் என கூறப்பட்டது.
இந்த பதிவை வேதனையுடன் டுவிட்டரில் Wilfried Zaha வெளியிட்டார்.
இதோடு தவறான வார்த்தைகள் மற்றும் இனவெறியை தூண்டும் புகைப்படங்களும் பதிவிடப்பட்டது.
இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டவர் குறித்து விசாரித்தனர்.
இதன் பின்னர் பொலிசார் டுவிட்டரில், இன்று கால்பந்து வீரருக்கு அனுப்பப்பட்ட தொடர் இனவெறி செய்திகள் தொடர்பாக 12 வயது சிறுவனை கைது செய்துள்ளோம்.
இனவெறியை என்றும் பொறுத்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ளனர்.
Woke up to this today. pic.twitter.com/Zal0F96htJ
— Wilfried Zaha (@wilfriedzaha) July 12, 2020