மகன்களுக்கு ஒரு பைசா கொடுக்காமல் சொத்து முழுவதையும் மகளுக்கு உயில் எழுதி வைத்த தாய்... மகன்களின் அடுத்த கட்ட நடவடிக்கை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
4344Shares

மகன்கள் தன்னை கவனிக்கவில்லை என்று கூறி, தன் சொத்து முழுவதையும் மகளுக்கு உயில் எழுதி வைத்துவிட்டார் ஒரு பிரித்தானிய தாய்! லண்டனில் வாழ்ந்துவந்த Anna Rea (86)க்கு நான்கு பிள்ளைகள்.

Rita என்னும் மகள், Remo, Nino மற்றும் David என்னும் மகன்கள். Anna உயிரிழக்கும் முன் தன் 850,000 பவுண்டுகள் மதிப்புள்ள வீட்டை தன் மகள் பெயருக்கு உயில் எழுதிக்கொடுத்துவிட்டார்.

மகன்களுக்கு ஒரு பைசா கூட கொடுக்கவில்லை அவர். எனவே, மகன்கள் மூவரும், தங்கள் சகோதரி, அம்மா மனதை மாற்றி தங்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தி, தனக்கு சாதகமாக சொத்தை வாங்கிக்கொண்டதாக வழக்குத் தொடர்ந்தார்கள்.

ஆனால், நீதிபதி Ritaவுக்கு சாதகமாக தீர்ப்பளித்துவிட்டார். தற்போது அந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளார்கள் சகோதரர்கள். தனது உயிலில், ‘எனது மகள் இத்தனை ஆண்டுகளும் என்னை கவனித்துக் கொண்டதால், எனது சொத்து முழுவதையும் என் மகளுக்கே கொடுக்கிறேன்.

எனது மகன்கள் என்னையோ என் மகளையோ கவனித்துக்கொள்ளவில்லை, என் மகள் மட்டுமே என்னை கவனித்துக்கொண்டாள்’ என்று எழுதியிருகிறார்.

சொத்தை நான்கு பேருக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கக் கோருகிறார்கள் சகோதரர்கள். வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்