பிரித்தானியாவில் இளம் விமான ஊழியர்கள் மூவர் பரிதாபமாக கொல்லப்பட்ட விவகாரம்: வெளிவரும் பின்னணி

Report Print Arbin Arbin in பிரித்தானியா

புத்தாண்டு தினத்தன்று மூன்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் கேபின் குழுவினர் சாலை விபத்தில் கொல்லப்பட்ட சம்பவத்தில், வாகன சாரதி வரம்புக்கு மீறிய மது போதையில் இருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

புத்தாண்டு தினத்தில் நண்பர்களான மூன்று விமான ஊழியர்களும் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது லொறி ஒன்றில் மிக மோசமாக மோதியது.

இதில் 20 வயதான ரேச்சல் கிளார்க் முன்பக்க கண்ணாடி வழியாக தூக்கி வீசப்பட்டார். அவரது நெருங்கிய நண்பர்களான டொமினிக் ஃபெல்(23), மற்றும் ஜோ ஃபின்னிஸ்(25) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.

மூன்று நண்பர்களும், புத்தாண்டு கொண்டாட்டம் முடித்து குடியிருப்புக்கு திரும்பும் நிலையிலேயே, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் லொறியுடம் பலமாக மோதியுள்ளது.

அவர்கள் பணிபுரிந்த ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகே ஏற்பட்ட சாலை விபத்தின் காரணமாக மூவரும் இறந்துவிட்டதாக உடற்கூராய்வு மேற்கொண்ட மருத்துவர் தெரிவித்துள்ளார்.

சீட் பெல்ட் அணியாத கிளார்க் சர்ரேயின் ஸ்டான்வெல்லில் உள்ள பெட்ஃபோண்ட் சாலையில் நொறுங்கிய காரிலிருந்து நான்கு மீற்றர் தொலைவில் தூக்கி வீசப்பட்ட நிலையில் காணப்பட்டார்.

ஃபெல் மற்றும் ஃபின்னிஸ் ஆகியோர் மது விருந்து கொண்டாட்டம் முடித்து தங்களது சக பெண் ஊழியர்களை அழைத்துச் செல்ல புறப்பட்ட நிலையிலேயே இந்த கொடூர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.

இவர்களுடன் இருந்த நான்காவது பயணி லாரன் ஃபீனி இந்த பகீர் சம்பவத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

லொறி சாரதியான Inderjit Sangha, இந்த விபத்தில் காயமின்றி தப்பியதுடன், அந்த அதிர்ச்சியில் இருந்து மீள மருத்துவமனை சிகிச்சையில் இருந்துள்ளார்.

கட்டுப்பாடிழந்த கார் தமது லொறியை நோக்கி விரைந்து வருவதையும், தம்மால் எதையும் செய்ய முடியாமல் போனதையும் அவர் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

வரம்புக்கு மீறிய மது போதையே இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்