1,20,000 பேர் பிரித்தானியாவில் இறப்பார்கள் என எச்சரித்த விஞ்ஞானிகள்! இதை தடுக்க பிரதமர் போரிஸ் மும்முரம்

Report Print Basu in பிரித்தானியா
778Shares

பிரித்தானியாவில் உள்ள தேசிய சுகாதார சேவையான NHS-க்கு அதிக நிதி வழங்குவதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியே நாட்டில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

இந்த குளிர்காலத்தில் நாட்டில் கொரோனா வைரஸ் சாத்தியமான இரண்டாவது அலைக்கு தயாராக NHS-க்கு 3 பில்லியன் பவுண்ட் கூடுதல் நிதியளிக்கப்படும் என பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.

இந்த குளிர்காலத்தில் வைரஸின் இரண்டாவது அலையால் பிரித்தானியாவின் மருத்துவமனைகளில் சுமார் 1,20,000 கொரோனா இறப்புகளைக் காணலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்த பின்னர் பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்றைய செய்தியாளர் சந்திப்பிலும், கொரோனா சோதனைத் திறனுக்கான புதிய இலக்கை பிரதமர் உறுதிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்