பிரித்தானியாவில் சில உள்ளூர் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு..! அவை என்னென்ன? வெளியான முக்கிய தகவல்

Report Print Basu in பிரித்தானியா
609Shares

பிரித்தானியாவில் உள்ளூர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட முதல் நகரம் லெய்செஸ்டர், ஆனால் அந்நகரில் ஜூலை 24 முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்-ல் தெரிவித்துார். ஆனால் அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படாது என அவர் குறிப்பிட்டார்.

கொரோனா வழக்கு எண்கள் இன்னும் தேசிய சராசரிக்கு மேல் இருப்பதாக அதிகாரிகள் கூறியதால் லெய்செஸ்டர், ஓட்பி மற்றும் விக்ஸ்டன் நகரங்கள் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு உட்பட்டுள்ளன.

பள்ளிகள் மற்றும் நர்சரிகள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்படும்.

லெய்செஸ்டரில் உள்ள பார்கள் மற்றும் உணவகங்கள் உட்பட விருந்தோம்பல் துறை ஊரடங்கு நிலையில் இருக்கும்.

தேவையான இடங்களில் அத்தியாவசியமற்ற பொருட்களை விற்கும் கடைகளை மூட புதிய உள்ளூர் அதிகாரம் பயன்படுத்தப்படும்.

ஆறுக்கும் மேற்பட்டவர்களின் அத்தியாவசிய பயணங்கள் மற்றும் சமூகக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்