ஜீன்ஸ் பேண்ட், தொப்பி என ஆளே மாறிப்போன ஷமீமா பேகம்! பிரித்தானியாவிற்க்குள் கால் வைத்ததும் கைது செய்ய காத்திருக்கும் பொலிசார்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
1039Shares

ஒரு பள்ளி மாணவியாக இருக்கும்போது 15 வயதில் பிரித்தனியாவை விட்டு ஐ.எஸ் அமைப்பில் சேருவதற்காக சென்ற ஷமீமா பேகம் (20), ஜீன்ஸ் பேன்ட் தொப்பி என ஆளே மாறிப்போய்விட்டார்.

தீவிரவாதி ஒருவரை மணந்து அவரது மூன்று பிள்ளைகளுக்கு தாயான ஷமீமாவின் பிரித்தானிய குடியுரிமையை உள்துறை அலுவலகம் பறித்தது.

ஆனால், அவரது சார்பில் சிவில் உரிமைகள் குழு ஒன்று அவரது குடியுரிமை பறிக்கப்பட்டது சர்வதேச விதிகளின்படி சட்டவிரோதம் என்று கூறி வழக்கு தொடர்ந்தது.

ஷமீமாவை நாட்டுக்குள் விடக்கூடாது என அரசு கங்கணம் கட்டிக்கொண்டிருந்த நிலையில், மேல் முறையீட்டு நீதிமன்றம் ஷமீமாவுக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளது அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தனது குடியுரிமை தொடர்பான வழக்குக்காக ஷமீமா பிரித்தானியா திரும்பவேண்டுமென்று நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது.

இந்த தீர்ப்பு, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஐ.எஸ் அமைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் ஷமீமா பிரித்தானியாவுக்குள் கால் வைத்ததும், தீவிரவாத குற்றங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீர்ப்பு சாதகமாக வந்துள்ளதைத் தொடர்ந்து, இதுவரை பர்தாவில் காணப்பட்ட ஷமீமா, தற்போது ஜீன்ஸ், ஷர்ட் மற்றும் தொப்பி என மேற்கத்திய ஸ்டைலில் உலாவரும் படங்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்