பிரித்தானியாவில் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு அதிகரித்த பகுதிகள் இது தான்! வெளியான முக்கிய தகவல்

Report Print Santhan in பிரித்தானியா
617Shares

பிரித்தானியாவின் இங்கிலாந்தில் கடந்த வாரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகமாகியுள்ள பகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸின் இரண்டாவது பரவலை தடுப்பதற்காக பிரித்தானியா அரசு அதற்கு தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையில் நாட்டின் ஒரு சில பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.

அந்த வகையில், கடந்த வாரத்தில், இங்கிலாந்தின் 11 பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக, பொது சுகாதார இங்கிலாந்தின் (PHE) தகவல்கள் தெரிவிக்கின்றன.

Lancashire-ல் உள்ள Pendle போன்ற பகுதிகள் ஜூலை 13-ஆம் திகதி வரை கொரோனா பாதிப்புகளில் மிகக் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன

thesun.co.uk

பொது சுகாதார இங்கிலாந்தின்(PHE) தரவு மக்கள் தொகையில் 100,000-க்கான கொரோனா பாதிப்புகளை

குறிப்பிடத்தக்க பரவல் உள்ள மற்ற பகுதிகளில் Blackburn-வுடன் Darwen-ம் அடங்கும். இது 36.3 முதல் 48.5-ஆக அதிகரித்துள்ளது.

அதே போன்று, Herefordshire-ம் இந்த வாரம் குறிப்பிடத்தக்க கொரோனா பாதிப்புகளை அதிகமாக கண்டுள்ளது. இங்கு 3.1 முதல் 43.2-ஆகவும், Luton 14.9 முதல் 27.6 வரையும் அதிகரித்துள்ளது.

Peterborough 21.4 முதல் 29.3 வரை, Kettering 15.8 முதல் 24.7 வரை சென்றது.

Braintree-ன் Essex 4.0 முதல் 23.8 ஆகவும், Eastbourne 10.4 முதல் 20.4 ஆகவும், Tunbridge 3.4 முதல் 15.2 ஆகவும், Broxbourne 1.0 முதல் 7.2 ஆகவும் உயர்ந்துள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இவை எல்லாம், கடந்த வாரம் உயர்ந்த பகுதிகள் எனவும், இது உள்ளூர் ஊரடங்கிற்குள் நுழையும் ஆபத்து உள்ள பகுதிகளாக பார்க்கப்படுகிறது.

நாட்டில் Leicester-வில் கொரோனா பாதிப்பு அதிகரித்த பின், அங்கு உள்ளூர் ஊரடங்கு விதிக்கப்பட்டது. இது தான் உள்ளூர் ஊரடங்கின் முதல் இடமாகும்,

வழக்குகள் அதிகரித்த பின்னர் உள்ளூர் பூட்டுதலுக்குச் சென்ற இங்கிலாந்தில் லெய்செஸ்டர் முதல் இடமாகும். பொது சுகாதார இங்கிலாந்தின் (PHE) தரவின் படி Leicester-ல் 100,000-க்கு 99.7 கொரோனா உறுதிபடுத்தப்பட்ட வழக்குகள் உள்ளது நினைவுகூரத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்