திடீரென்று இன்று ரகசியமாக நடந்து முடிந்த பிரித்தானிய இளவரசி திருமணம்... எங்கு தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா
685Shares

பிரித்தானியாவின் வின்ஸ்டரில் இளவரசி பீட்ரைஸ் திருமணம் ரகசியமாக நடந்துள்ள நிலையில், இந்த விழாவில் மகாராணி மற்றும் இளவரசர் பிளிப் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய மகாராணியாரின் பேத்தியான Beatrice (31), கோடீஸ்வரரான Edoardo Mapelli Mozzi (37)ஐ, St James மாளிகையில், வரும் மே மாதம் 29ஆம் திகதி திருமணம் செய்வதாக இருந்தது.

இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த செப்டம்பர் மாதம் இத்தாலியில் நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளதால், பொது நிகழ்ச்சிகளில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, பிரித்தானிய அரசு கொரோனா பிரச்சினை காரணமாக, 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றவர்களை சந்திப்பதை தவிர்க்கவேண்டும் என அறிவுறுத்தியிருப்பதால், 93 வயதாகும் மகாராணி மற்றும் 98 வயதாகும் அவரது கணவர் ஆகியோரால் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது.

இதனால் இவர்களின் திருமணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்று காலை Windsor Castle-லில் இவர்களின் திருமணம் கொரோனா வைரஸ் பாதுகாப்பு காரணமாக ரகசியமாக நடைபெற்றுள்ளது.

இந்த விழாவில் மகாராணி மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

மணமகனின் தந்தை இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்ட 20 விருந்தினர்கள் அங்கு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்