பிரித்தானியாவில் பயங்கரம்... ஈவு இரக்கமின்றி மனைவியை கொல்ல முயன்ற கணவன்: அதிரவைக்கும் சம்பவம்

Report Print Santhan in பிரித்தானியா
769Shares

பிரித்தானியாவில் பாராசூட்டை நாசப்படுத்தி மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அது எப்படி நடந்தது? மனைவி உயிர் பிழைத்தது எப்படி? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவின் Wiltshire-ல் இருக்கும் Amesbury பகுதியை சேர்ந்த Victoria என்ற பெண் கடந்த 2015-ஆம் ஆண்டு சுமார் 3000 அடி தொலைவில் இருந்து பாராசூட்டில் இருந்து தவறி விழுந்து அதிசயமாக உயிர் பிழைத்தார்.

இதற்கு அவர் கணவரின் சதித்திட்டம் தான் என்று தெரியவந்ததால், அவரின் கணவர் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார்.

Credit: Pixel 8000

இந்நிலையில், இந்த சம்பவம் எப்படி நடந்தது? அவ்வளவு அடி தூரத்தில் இருந்து விழுந்தும்? விக்டோரியா உயிர் பிழைத்தது எப்படி என்பது தொடர்பான தகவல்களை பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.

அதில், பிரித்தானியாவின் Wiltshire-ல் இருக்கும் Amesbury-யில் கணவர் Emile மற்றும் இரண்டு குழந்தைகளுடன் Victoria வசித்து வந்தார்.

44 வயதான இவர் தன்னுடைய கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

Victoria ஒரு இராணுவ பிசியோதெரபிஸ்ட் மற்றும் மிகவும் அனுபவ வாய்ந்த பாராசூட்டிஸ் ஆவார்.

இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமை அன்று Salisbury-யில் பாராசூட்(skydiving)-ன் போது எதிர்பார்தவிதமாக அது தோல்வியில் முடிந்ததால், அங்கிருந்து கீழே விழுந்தார்.

இதனால் பயங்கர அடியுடன் உயிர் பிழைத்த Victoria, இது பாரசூட் கொலை சதி என்று விவரிக்கும் வகையில் ஐடியில் ஒளிபரப்பப்பட்டது.

அதாவது பாராசூட்டில் இருந்த போது கணவரான Emile Cilliers மனைவியின் பாராசூட்டின் இரண்டு முக்கிய பகுதிகளை அகற்றினார், இதனால் கட்டுப்பாட்டை மீறியதால், அவர் கீழே விழுந்தார்.

இதனால் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், பாராசூட்டை நாசப்படுத்தி மனைவியை கொலை செய்ய முயன்றதற்காக அவருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது.

மேல் இருந்து கீழே விழுந்த Victoria-வின் கால் மற்றும் விலா எலும்புகள் உடைந்தன.

இருப்பினும் அவர், தன்னுடைய தன்னம்பிக்கை மற்றும் பாராசூட்டின் அனுபவத்தால் உயிர் தப்பியுள்ளது. அதாவது பாராசூட் பறக்கும் போது, ஏதேனும் ஆகிவிட்டால் எப்படி குதிப்பது, தற்காத்து கொள்வது என்பதை அறிந்திருந்தார்.

Credit: PA:Press Association

இது குறித்து Victoria கூறுகையில், பயப்படக்கூடாது என்பதை முதலில் என்னை நானே கட்டாயப்ப்டுத்திக் கொண்டேன், நான் அதை சரியாக செய்ய வேண்டும், நான் உயிருக்கு போராடிய போது கூடன், என் குழந்தைகளுக்கு நான் தேவை என்பதை உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.

Victoria ஒரு உழுவு செய்யப்பட்ட வயலில் இருக்கும் மணல் மீது விழுந்தார். அப்போது உயிர் பிழைத்தாலும்,அவள் இடுப்பு மற்றும் விலா எலும்புகளை உடைத்தது தெரியவந்தது.

மனைவியை கொலை செய்ய முயன்ற Emile Cilliers திருமணத்திற்கு புறம்பான இரண்டு உறவுகள்(இரண்டு கள்ளக்காதல்) வைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி கடனில் இருந்துள்ளார். இதனால் மனைவியை கொலை செய்துவிட்டு, இரண்டு பேரில் யாரேனும் ஒருவருடன் புதிய வாழ்க்கை துவங்குவதற்கு எதிர்பார்த்துள்ளார்.

Credit: Rex Features

ஆனால், சிக்கிவிட்டார். இவர் மனைவியை இரண்டு முறை கொலை செய்ய முயன்றுள்ளார். கடந்த மார்ச் மாதம் 2015-ஆம் ஆண்டு முதல் கொலை முயற்சியாக வீட்டின் எரிவாயு வால்வை சேதப்படுத்தியுள்ளார்.

இதை Victoria கண்டுபிடித்துவிட்டதால், அப்போது தப்பித்துவிட்டார்.

இப்போது வரை தான் திகைத்து போயிருப்பதாகவும், அவர் என்னை கொல்லவும், குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கவும் நினைத்திருப்பார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

நான் என் கணவரை நான் நேசிக்கிறேன், ஆனால், இந்த திருமணத்திற்காக வருத்தப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்