Brexit பொது வாக்கெடுப்பு: ரஷ்யாவின் தலையீடு இருந்ததா?

Report Print Fathima Fathima in பிரித்தானியா

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பாக அந்நாட்டில் கடந்த 2016ம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடந்தது.

இதில் 52.48 சதவிகிதத்தினர் ஆதரவாக வாக்களித்தனர், இதில் ரஷ்யா தலையீடு செய்து முடிவுகளை தனது விருப்பம் போல் அமைத்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்த நாடாளுமன்ற நிலைக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.

சமீபத்தில் அந்த குழு வெளியிட்ட அறிக்கையில், பொதுவாக்கெடுப்பில் இணையதளம் மூலம் ரஷியா தலையிட்டதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.

பிரெக்ஸிட் மட்டுமன்றி, கடந்த ஆண்டு நடைபெற்ற பிரிட்டன் பொதுத் தோ்தலிலும் இணையதளம் மூலம் ரஷ்யா தலையீடு செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது, எனினும், இதனை ரஷ்யா மறுத்து வருகிறது.

இதுகுறித்து பிரிட்டனுக்கான ரஷியத் தூதா் ஆண்ட்ரெய் கெலின் கூறுகையில், பிரித்தானியாவின் உள்நாட்டு அரசியலில் தலையிடுவதில் ரஷ்யாவுக்கு எந்த ஆா்வமும் இல்லை.

பொதுத் தோ்தலில் கன்சா்வேடிவ் கட்சி வெற்றி பெற்றாலும், தொழிலாளா் கட்சி வெற்றி பெற்றாலும் எங்களுக்கு இரண்டுமே ஒன்றுதான். எனவே, அதில் நாங்கள் தலையீடு செய்வதற்கு எந்தக் காரணமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்