இதை மட்டும் செய்திருந்தால் அவர் உயிரோடு இருந்திருப்பார்! லண்டனில் தந்தையை பறிகொடுத்த இலங்கை பெண் உருக்கம்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் கொரோனா தொற்றால் இலங்கையை சேர்ந்த பேருந்து ஓட்டுனர் உயிரிழந்த நிலையில், பேருந்து ஓட்டுனர்கள் தொடர்பில் முக்கிய விடயத்தை அவரின் மகள் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையை சேர்ந்தவர் ரஞ்சித் சந்திரபாலா (64). இவர் லண்டனின் Ealing-க்கு கடந்த 1972ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தார்.

லண்டன் பேருந்து ஓட்டுனராக 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த ரஞ்சித் கடந்த மே 3ஆம் திகதி கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

No 92 பேருந்தை ரஞ்சித் இயக்கி வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இந்த நிலையில் பிரித்தானியாவில் மற்றவர்களை காட்டிலும் பேருந்து ஓட்டுனர்கள் தான் கொரோனாவுக்கு அதிகம் பலியாகிறார்கள் எனவும் இது குறித்து பொது விசாரணை வேண்டும் எனவும் ரஞ்சித்தின் மகள் லிசி சந்திரபாலா வலியுறுத்தியுள்ளார்.

அவர் கூறுகையில், பிரதமர் போரிஸ் ஜான்சனும் அவரது அரசாங்கமும் தொற்றுநோயை தீவிரமாக எடுத்துக் கொண்டு முன்பே லாக்டவுனை தீவிரப்படுத்தியிருந்தால் என் அப்பா உட்பட ஏராளமான பேருந்து ஓட்டுனர்கள் இன்றும் உயிருடன் இருந்திருப்பார்கள்.

ஓட்டுநர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான இறுதி பொறுப்பு போக்குவரத்து துறை மற்றும் அதன் மாநில செயலாளர் கிராண்ட் ஷாப்ஸுக்கானது என்பது எங்களுக்கு மிகவும் தெளிவாக தெரியும்.

அவர்கள் தான் Transport for London மற்றும் பேருந்து நிறுவனங்களுக்கான கொள்கைகளை அமைத்தனர்.

அவர்கள் மருத்துவ நிபுணர்களை அணுகி பேருந்து ஓட்டுனர்களை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று ஆலோசனை கூறலாம்.

என்ன தவறு நடந்துள்ளது என்பதைக் கண்டறிய எங்களுக்கு ஒரு ஆரம்ப விசாரணை தேவை, ஏனெனில் அதை வைத்து கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டால் அந்த தொற்றால் அதிக ஓட்டுனர்கள் இறக்கமாட்டார்கள்.

லாக்டவுன் நேரத்தில் பிரச்சினை இன்னும் அதிகமாக செல்கிறது என நான் நம்புகிறேன்.

முககவசங்கள் தேவையில்லை என கூறியதில் Transport for London முன்னணியில் இருந்தது, எங்களிடம் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளது என கூறப்பட்டது.

ஆனால் என் தந்தை உள்ளிட்ட ஓட்டுனர்கள் கைவிடப்பட்டார்கள்.

பேருந்து நிறுவனங்கள் ஓட்டுநர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுத்தபோது வேறுபாடுகள் இருந்தன என்று அறிக்கைகள் கூறுகிறது என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே லண்டனில் கொரோனாவால் இறந்த பேருந்து ஓட்டுனர்கள் குறித்து Transport for London ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.

அதில், நாடெங்கிலும் உள்ள முன்னணி தொழிலாளர்கள் கொரோனா வைரஸால் விகிதாசாரமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது, அதனால்தான் பேருந்து ஓட்டுனர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த அனைத்து லண்டன் பேருந்து ஆபரேட்டர்களுடனும் நாங்கள் நெருக்கமாக பணியாற்றுகிறோம் என தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்