குழந்தைகளின் இரத்தத்திலேயே ஊறிப்போனதா இனவெறி?: பிரித்தானியாவில் அதிரவைத்த ஒரு சம்பவம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
464Shares

பிறந்த நாள் விழா ஒன்றில் பொம்மை வேடமிட்டு குழந்தைகளை மகிழ்விக்க வந்த கருப்பின இளம்பெண்கள் மூவர், ஆரம்பப் பள்ளி மாணவர்களால் இனரீதியாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்போர்ட்ஷையரில் நடக்கவிருந்த நான்கு வயது சிறுவன் ஒருவனின் பிறந்தநாள் விழாவில், கார்ட்டூன்களில் வரும் பாத்திரங்கள் போல் வேடமிட்டு குழந்தைகளை மகிழ்விப்பதற்காக, Ebonie Gooding (28), அவரது அக்கா Tamara (29) மற்றும் உறவினரான Rosie Trumpet (31)ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், அவர்கள் பிறந்தநாள் விழாவுக்கு சென்றபோது, ஆரம்பப்பள்ளி பயிலும் வயதுடைய சிறுவர் சிறுமியர், அவர்களை அடித்தும் மிதித்தும் இருக்கிறார்கள். சரி, அவர்களை அமைதிப்படுத்தலாம் என அழுவது போல் நடித்துள்ளனர் இந்த இளம்பெண்கள்.

ஆனாலும், அவர்கள் தொடர்ந்து தாக்கியுள்ளனர். இருந்தபோதிலும், அந்த பிள்ளைகளின் பெற்றோர் அந்த பிள்ளைகளை கட்டுப்படுத்தவே இல்லையாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த சிறுபிள்ளைகள் இந்த பெண்களை தாக்கும் நேரம் முழுவதும், அவர்களை இன ரீதியாக விமர்சித்துக்கொண்டே இருந்தார்களாம்.

இனி இங்கு இருக்கக்கூடாது, என்று எண்ணி வீடு திரும்ப முயன்றால், கதவுகளை மூடியதோடு, அவர்களுக்கு கொடுத்த முன்பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு அந்த சிறுவனின் பெற்றோர் வற்புறுத்தினார்களாம்.

கடைசியாக எட்டு பொலிசார் வந்து அந்த இளம்பெண்களை மீட்கவேண்டியதாயிற்றாம். குழந்தைகள் மனதில் இனவெறியை விதைத்தது யார்? எங்கே போகிறது இந்த உலகம்? கள்ளமறியா குழந்தைகளும் இனவெறித்தாக்குதல் நடத்தினால் உலகம் எதிர்காலத்தில் எப்படியிருக்கும் என்ற அச்சம்தான் ஏற்படுகிறது!

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்