கொரோனா தடுப்பூசிக்காக பிரித்தானியா முக்கிய ஒப்பந்தம்! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

Report Print Basu in பிரித்தானியா
636Shares

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் பிரித்தானியா அரசு பிரபல மருந்து நிறுவனங்களுடன் தடுப்பூசி வழங்குவதற்கான ஒப்பந்தம் செய்துள்ளது.

பிரித்தானியாவில் தற்போது வரை சுமார் 3,02,295 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது, 45,963 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சனோபி, ஜி.எஸ்.கே ஆகிய இரு நிறுவனகளுடன் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒப்பந்தம் செய்துள்ளது பிரித்தானியா.

சனோபி மற்றும் ஜி.எஸ்.கே ஆகியவை பிரித்தானியா அரசாங்கத்துடன் 60 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளன.

உலகெங்கிலும் கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதற்கான ஆய்வுகள் மற்றும் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, இருந்தாலும் தற்போது வரை தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சனோபி, ஜி.எஸ்.கே இரண்டு மருந்து நிறுவனங்களும் செப்டம்பர் மாதத்தில் தங்கள் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளன.

சனோபியின் S-protein COVID-19 ஆன்டிஜெனை ஜி.எஸ்.கே.வின் தொற்றுநோய் துணை தொழில்நுட்பத்துடன் இணைப்பதன் மூலம் இந்த தடுப்பூசி உருவாக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்