பிரித்தானியாவிற்கு இதை தவிர வேறு வழியே இல்லை..!

Report Print Basu in பிரித்தானியா
566Shares

கொரோனா வைரஸ் அதிகம் இருப்பதாக கருதப்படும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 14 நாள் தனிமைப்படுத்தலை விதிப்பதை தவிர பிரித்தானியாவுக்கு மாற்று வழிஇல்லை என்று நாடடின் கலாச்சார அமைச்சர் ஆலிவர் டவுடன் தெரிவித்தார்.

வார இறுதியில் ஸ்பெயினில் இருந்து வரும் பயணிகளுக்கு பிரித்தானியா கட்டாய தனிமைப்படுத்தல் உத்தரவை விதித்தது.

பிரித்தானியாவின் உத்தரவு வணிகம் அதிகம் இருக்கும் தற்போதைய கோடை விடுமுறை காலத்தில் விமான நிறுவனங்கள் மற்றும் பயண நிறுவனங்களுக்கு பலத்த அடியாக அமைந்தது.

கொரோனா வழக்குகள் அதிகரித்து வரும் பிற நாடுகளிலிருந்து வைரஸை மீண்டும் இறக்குமதி செய்து ஆபத்தை எதிர்கொள்ள முடியாது, அதனால் தான் ஸ்பெயினுக்கு நாங்கள் கட்டுப்பாடுகளை விதித்தோம் என்று பிரித்தானியா கலாச்சார அமைச்சர் ஆலிவர் டவுடன் கூறினார்.

நாங்கள் எல்லா வழிகளையும் மதிப்பாய்வு செய்கிறோம், ஏனென்றால் இடையூறுகளை குறைக்கவே நாங்கள் விரும்புகிறோம்.

விமான நிலையங்களில் சோதனை தொடர்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இதனால் சோதனை தீர்வாகிவிடும் என்று அர்த்தமில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்