பிரித்தானியாவில் இனி தனிமைப்படுத்தல் ஏழு நாட்கள் இல்லை... எத்தனை நாட்கள் தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானோர் தங்களை ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், அந்த கால அளவு நீட்டிக்கப்பட உள்ளது.

தற்போதைய விதிகளின்படி, ஏற்கனவே கொரோனா இருப்பதாக பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டோரும், வெளிப்படையாக அறிகுறிகள் உடையவர்களும் தங்களை ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள்.

அதே நேரத்தில், கொரோனா தொற்றியவர்களின் வீட்டில் உள்ள மற்றவர்கள், தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள்.

அதேபோல், வெளிநாடுகளிலிருந்து பிரித்தானியா திரும்புவோரும், தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியிருந்தது.

இந்நிலையில், சுகாதார செயலரான Matt Hancock விதிகளில் சில மாற்றங்களை அறிவிக்க இருக்கிறார்.

முன்பிருந்த விதிகள், சிலருக்கு ஏழு நாட்கள், சிலருக்கு 14 நாட்கள் என குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், இனி அனைவருக்குமே, அதாவது கொரோனா தொற்றியவர்கள், உடன் இருப்போர், வெளி நாடுகளிலிருந்து திரும்புவோர் என அனைவருமே இனி தங்களை 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பு ஏழு நாட்கள் தனிமைப்படுத்தக் கோரப்பட்ட கொரோனா தொற்றியவர்களுக்கு, தனிமைப்படுத்தல் காலம் அதிகரிக்கப்படுகிறது.

முன்பு 14 நட்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளின் உடன் வாழ்வோர், மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரும்புவோருக்கான தனிமைப்படுத்தல் காலம் குறைக்கப்படுகிறது.

ஆக, இனி ஒரே மாதிரியாக, அனைத்து பிரிவினருக்கும் தனிமைப்படுத்தல் காலகட்டம் 10 நாட்கள் என முடிவு செய்யப்பட இருக்கிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்