ப்ரீசரிலிருந்து வீசிய துர்நாற்றம்... மொய்த்த ஈக்கள்: பிரித்தானிய வீடு ஒன்றில் பொலிசார் கண்ட அதிரவைத்த காட்சி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கிழக்கு லண்டனிலுள்ள ஒரு வீட்டில் சந்தேகத்துக்குரிய நபர் ஒருவரைத் தேடிவந்த பொலிசார், அந்த வீட்டில் துர்நாற்றம் வீசுவதையும், ப்ரீசர் ஒன்றில் ஈக்கள் மொய்ப்பதையும் கண்டுள்ளனர்.

பூட்டப்பட்டிருந்த அந்த ப்ரீசரின் பூட்டை உடைத்துத் திறந்த பொலிசார் கண்ட காட்சி, அவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஆம், அந்த சிறிய ரக ப்ரீசருக்குள் இரண்டு இளம்பெண்களின் உடல்கள் திணித்துவைக்கப்பட்டிருந்தது.

அந்த ப்ரீசர் இயங்கிக்கொண்டிருந்தாலும், இடையில் மின்சாரம் தடைபட்டதால், அந்த உடல்கள் அழுகிப்போயிருந்திருக்கின்றன.

அந்த பெண்களில் ஒருவரான Henriett Szucsஐ, கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் Zahid Younis (35)இன் வீட்டில் 2016ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் கடைசியாக பார்த்த சாட்சியங்கள் உள்ளன.

அத்துடன் கொலை செய்யப்பட்ட மற்றொரு பெண்ணான Mihrican Mustafa என்ற பெண்ணை Younis வீட்டில் கடைசியாக 2018ஆம் ஆண்டு மே மாதம் பார்த்த சாட்சியங்களும் உள்ளன.

அத்துடன், 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி, Younis ப்ரீசர் ஒன்றை வாங்கியுள்ளான்.

சரியாக Szucs கொலை செய்யப்பட்டபின், அவரது உடலை மறைப்பதற்காக அவன் அந்த ப்ரீசரை வாங்கியுள்ளது தெளிவாகத் தெரிகிறது.

உடற்கூறு ஆய்வில், இரண்டு பெண்களும் கடுமையாக அடித்து நொறுக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

Younis வீட்டை பொலிசார் சோதனையிட்டபோது, இரண்டு பெண்களுக்கும் சொந்தமான பொருட்கள், கைரேகை முதலானவை அவன் வீட்டில் கிடைத்துள்ளன.

மூன்று ஆண்டுகள் அந்த உடல்கள் அந்த ப்ரீசரிலேயே இருந்த நிலையில் அந்த வீட்டிலேயே வாழ்ந்துவந்த Younis, மின்சாரம் தடைபட்டு உடல்கள் அழுகி நாற்றம் வீசத்தொடங்கியதை அடுத்து வேறொரு வீட்டில் சென்று தங்கியிருக்கிறான்.

கைது செய்யப்பட்டு கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் நேற்று விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட Younis, தனக்கு உடல் நலம் சரியாக இல்லை என்று கூறியதால் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். வழக்கு விசாரணை தொடர்கிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்