பிரித்தானியாவில் 14 பேர்களில் ஒருவருக்கு... கொரோனா பெருந்தொற்று தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் 14 பேர்களில் ஒருவர் ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என மிக முக்கியமான புதிய ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த பிரித்தானியாவில் சுமார் 20,000 மக்களிடம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில், மொத்த மக்கள் தொகையில் 7.1 சதவீத பிரித்தானியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதாவது மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகள் நம்பத்தன்மை கொண்டதாக இருந்தால் பிரித்தானியாவில் கிட்டத்தட்ட 5 மில்லியன் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆனால், நாடு முழுவதும் முந்தைய நோய்த்தொற்றின் அளவை ஆராய்வதை நோக்கமாகக் கொண்ட முக்கியமான இந்த புதிய ஆய்வில், வயது, பிராந்தியம், இனம் மற்றும் பற்றாக்குறை ஆகியவற்றால் தொற்று விகிதங்கள் கணிசமாக வேறுபடுவதாக தெரியவந்துள்ளது.

முந்தைய நோய்த்தொற்றின் விகிதம் கருப்பின மக்கள் (11.3%) மற்றும் தெற்காசிய (9%) பங்கேற்பாளர்களிடையே வெள்ளையின மக்களுடன் ஒப்பிடும்போது (6.9%) அதிகமாக இருந்தது என்று இங்கிலாந்து பயோபேங்க் ஆய்வு தெரிவித்துள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வறிக்கையானது உண்மையில் மகத்தானது என கூறும் அமைச்சர் லார்ட் பெத்தேல்,

பங்கேற்ற 20,000 பேருக்கு நாங்கள் நம்பமுடியாத அளவிற்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்றார்.

மேலும் இதுபோன்ற முக்கியமான ஆராய்ச்சிகளை நாம் தொடர்ந்து முன்னெடுப்பது மிக முக்கியம் எனவும் அமைச்சர் லார்ட் பெத்தேல் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்