பிரித்தானியாவில் இரவோடு இரவாக அமலுக்கு வந்த புதிய தடை..! 4 மில்லியன் பேர் பாதிப்பு

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்ததைத் தொடர்ந்து கிரேட்டர் மான்செஸ்டர், கிழக்கு லங்காஷயர் மற்றும் மேற்கு யார்க்ஷயரின் சில பகுதிகளுக்குள் தனித்தனி வீடுகளில் வசிக்கும் மக்கள் ஒருவருக்கொருவர் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளிகளை மக்கள் கடைபிடிக்காத காரணத்தினால் பெரும்பாலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கிறது என்று சுகாதார செயலாளர் கூறினார்.

இந்த நடவடிக்கைகள் குறித்து தெளிவு இல்லாதது மற்றும் அவற்றை இரவில் தாமதமாக அறிவித்ததற்காக அரசாங்கத்தை எதிர்க்கட்சியான தொழிற்கட்சி விமர்சித்துள்ளது.

கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுவதால் பிரித்தானயாவின் வடக்கில் உள்ள பிராந்தியங்களான கிரேட்டர் மான்செஸ்டர், பிளாக்பர்ன் வித் டார்வென், பர்ன்லி, ஹைண்ட்பர்ன், பெண்டில், ரோசண்டேல், பிராட்போர்டு, கால்டர்டேல் மற்றும் கிர்க்லீஸ் ஆகிய இடங்களில் வசிக்கும் நான்கு மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்