லண்டனில் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்! நீதிமன்றம் அளித்துள்ள முக்கிய தீர்ப்பு... முழு விபரம்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை பெண்ணை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த நபர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இலங்கையை சேர்ந்த இளம் விதவையான Michelle Samaraweera என்பவரை கொலை செய்த இந்தியரான Aman Vyas (35) தான் குற்றவாளி என பத்து வருடங்கள் கழித்து நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Aman Vyas மொத்தமாக 4 பெண்களை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

கடந்த 2009 மார்ச் மாதம் 24ஆம் திகதி அடுக்குமாடி வீட்டுக்கு சென்ற பெண்ணை பின் தொடர்ந்து சென்று அவரை பலாத்காரம் செய்து தாக்கியுள்ளார்.

இரண்டாவதாக அதே ஆண்டு ஏப்ரல் 22ஆம் திகதி பெண்ணொருவரை நள்ளிரவில் பலாத்காரம் செய்திருக்கிறார்.

மூன்றாவதாக அதே ஆண்டு 29 ஏப்ரலில் கடையில் இருந்து கிளம்பி சென்ற துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

நான்காவதாக இலங்கை பெண்ணான Michelle Samaraweera-ஐ துஷ்பிரயோகம் செய்து கொலை செய்துள்ளார். அவர் நள்ளிரவில் கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்ற போதே இந்த சம்பவம் நடந்துள்ளது.

2009ஆம் ஆண்டு, மே மாதம் 30ஆம் திகதி, சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில், கிழக்கு லண்டனின் Walthamstow என்ற பகுதியில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் Michelle சடலம் அரை நிர்வாணமாக கிடந்ததைக் கண்ட மக்கள் பொலிசாருக்கு தகவலளித்தனர்.

பின்னரே பொலிசார் வந்து சடலத்தை மீட்டனர். பிரேத பரிசோதனையில் Michelle கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்குப்பின் 2011ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி Aman Vyas கைது செய்யப்பட்டார்.

இதன்பின்னர் கடந்த 2019ஆம் ஆண்டு Aman Vyas பிரித்தானியாவுக்கு நாடுகடத்தப்பட்ட நிலையில் அவர் மீதான வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இவ்வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் Aman Vyas குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அவருக்கான தண்டனை விபரம் ஆகஸ்ட் 21ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

இது குறித்து அரச வழக்கு விசாரணை சேவை சார்பில் பேசிய Aisling Hosein, இரவில் தனியாக செல்லும் பெண்களை தேடி சென்று வன்முறை தாக்குதலில் Aman Vyas ஈடுபட்டுள்ளார்.

இவரை நீதிக்கு முன்னர் கொண்டு வர பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன் வந்ததை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இந்த தீர்ப்பானது Michelle குடும்பத்தாருக்கு ஆறுதலை கொடுக்கும் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்