‘பிரித்தானியாவுக்கு பயணிக்க வேண்டாம்’.. மக்களுக்கு ஸ்காட்லாந்து எச்சரிக்கை

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவின் வடக்கு பகுதியில் கொரோனா பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு பயணிக்க வேண்டாம் என ஸ்காட்லாந்து நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிரேட்டர் மான்செஸ்டர் மற்றும் வடக்கு இங்கிலாந்தின் பிற பகுதிகளில் கொரோனா வழக்குகள் அதிகரித்ததைத் தொடர்ந்து புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கிரேட்டர் மான்செஸ்டர், கிழக்கு லங்காஷயர் மற்றும் மேற்கு யார்க்ஷயரின் சில பகுதிகளுக்குள் தனித்தனி வீடுகளில் வசிக்கும் மக்கள் ஒருவருக்கொருவர் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்காடலாந்திலிருந்து பிரித்தானியாவின் வடக்கில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணிக்க திட்டமிட்டுள்ள அனைவருக்கும் மற்றும் பிரித்தானியாவின் வடக்ககு பகுதிகளிலிருந்து ஸ்காட்லாந்து பயணிக்க திட்டமிட்டுள்ள அனைவரும் அவர்களின் திட்டங்களை ரத்து செய்ய நான் கடுமையாக அறிவுறுத்துகிறேன் என்று ஸ்காட்லாந்தின் முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்