திருமணம் முடித்து வெறும் நான்கு வாரங்கள்... கதறும் இளம் விதவை: 3 பிரித்தானிய இளைஞர்களால் ஏற்பட்ட கொடூரம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் திருட்டு சம்பவத்தை தடுத்ததால் 3 இளைஞர்களால் கொடூரமாக கொல்லப்பட்ட இளம் பொலிஸ் அதிகாரியின் மனைவி தமது தற்போதை நிலையை குறிப்பிட்டு கதறியுள்ளார்.

பிரித்தானியாவில் திருட்டு சம்பவத்தை தடுத்ததால் ஏற்பட்ட ஆத்திரம் காரணமாக தொடர்புடைய 3 இளைஞர்கள் ஆண்ட்ரூ ஹார்பர் என்ற பொலிஸ் அதிகாரியை மிகக் கொடூரமாக கொலை செய்தனர்.

இந்த கொலை வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றவாளிகள் மூவருக்கும் குறுகிய கால சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வெறும் சிறை தண்டனையுடன் அந்த மூவரும் தப்பியது தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என கூறியிருந்த கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி ஆண்ட்ரூ ஹார்பரின் விதவை லிசி ஹார்பர்,

அந்த இளம் குண்டர்களால் ஆண்ட்ரூ மிகக் கொடூரமாக கொல்லப்பட்டதிலிருந்து ஒவ்வொரு நாளும் கதறினேன், வாய்விட்டு அழுதேன், எனது வருத்தத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியவில்லை என்றார்.

ஹார்ப்பர் இறப்பதற்கு நான்கு வாரங்களுக்கு முன்னர் தான் தனது மிகவும் நெருங்கிய தோழியான லிஸியை மணந்தார்.

இருவரும் ஒன்றாக தேனிலவு செல்ல திட்டமிட்டு வந்த நிலையிலேயே, திருட்டு சம்பவத்தை விசாரிக்க சென்ற இடத்தில் ஹார்ப்பர் கொல்லப்பட்டார்.

அதுவும் ஹார்ப்பரின் பணி நேரம் முடிய சில மணித்துளிகளே இருந்துள்ளது. ஆனால் சம்பவப்பகுதிக்கு சென்ற நான்கு மணி நேரத்திற்கு பிறகு ஹார்ப்பர் கொல்லப்பட்ட சம்பவம் வெளியானது.

சக ஊழியர் ஒருவரின் கோரிக்கையை ஏற்று அந்த மோசடியை முறியடிக்க சென்றுள்ளார் ஹார்ப்பர்.

ஆனால் கொடூர குணம் கொண்ட அந்த 3 இளைஞர்கள் கையில் தனியாக சிக்கிக் கொண்ட ஹார்ப்பர், உடல் சிதைந்து மரணமடைந்தார்.

இந்த வழக்கில் கொலை குற்றத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட அந்த 3 இளைஞர்களுக்கும் குறுகிய கால சிறை தண்டனை மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்