‘பிரித்தானியாவில் கொரோனா அதிகரித்து வருகிறது’.. ஆதாரத்தை வெளியிட்ட தேசிய புள்ளிவிவர அலுவலகம்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் சமீபத்திய வாரங்களில் கொரோனா நோய்த்தொற்று உறுதியாகும் நபர்களின் எண்ணிகையில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நாட்டின் தேசிய புள்ளவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த புள்ளிவிவரம் நோய்த்தொற்று கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டது, இந்த கணக்கெடுப்பில் பிரித்தானியாவில் உள்ள வீடுகளில் குத்துமதிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடமிருந்து ஸ்வாப்களை பெற்று சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பிரித்தானியாவில் ஜூலை 20ம் திகதி முதல் 26ம் திகதி வரை 1,500 நபர்களில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் 4,200 புதிய வழக்குகள் பதிவானது என வாராந்திர நோய்த்தொற்று கணக்கெடுப்பில் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முந்தைய வாரத்தில் ஒவ்வொரு நாளும் 2,800 புதிய வழக்குகள் பதிவானதாகவும், பிரித்தானியாவில் உள்ள வீடுகளில் 2,000 பேரில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய புள்ளவிவர அலுவலகம் மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்