60 மீற்றர் மலைமுகடு... மூன்று நாட்கள் சிக்கித் தவிப்பு: போராடி பத்திரமாக மீட்ட பிரித்தானிய குழுவினர்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் 60 மீற்றர் கொண்ட ஒரு மலைமுகடில் இருந்து கீழே தவறி விழுந்த ஒரு வளர்ப்பு நாய் மூன்று நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது.

ஃப்ரேயா என்ற வளர்ப்பு நாயே, அந்த 60 மீற்றர் மலைமுகட்டில் இருந்து தவறி விழுந்து ஆபத்தான நிலையில் இருந்துள்ளது.

இறுதியில் மூன்று நாட்களுக்கு பின்னர் மோன்டி என்ற நாயால் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவர்கள் அளித்த தகவலின் பேரின் விரைந்து வந்த மீட்புக்குழுவினர் சுமார் 5 மணி நேரம் போராடி ஃப்ரேயாவை பத்திரமாக மீட்டுள்ளனர்.

ஃப்ரேயா ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளது, மேலும் அதன் உரிமையாளர்களும் அவர்களது நண்பர்களும் தொடர்ச்சியான தீவிரமான தேடல்களை முன்னெடுத்துள்ளனர்.

ஃப்ரேயா முதலில் ஒரு பத்து மீற்றர் ஆழத்திலேயே சிக்கியிருந்துள்ளது. ஆனால் ஒரு மரம் உடைந்து விழவும், அதனுடன் ஃப்ரேயாவும் இன்னும் ஆழத்திற்கு சென்றுள்ளது.

இதனிடையே புதனன்று மோன்டி என்ற நாய் ஃப்ரேயாவை கண்டுபிடித்து, தனது உரிமையாளருக்கு உணர்த்தவும் அவர்கள் உடனடியாக ஃப்ரேயாவின் உரிமையாளருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, குகைகளில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுவினரின் உதவியுடன், ஃப்ரேயா பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்