ஷமீமா பேகம் பிரித்தானியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவாரா? நீதிமன்றம் முக்கிய முடிவு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஐ,எஸ் அமைப்பில் இணைவதற்காக லண்டனிலிருந்து சிரியாவுக்கு ஓடியவர், 15 வயது பிரித்தானிய மாணவியான ஷமீமா பேகம்.

ஷமீமா பேகத்தில் குடியுரிமையை உள்துறை அலுவலகம் பறித்ததற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

அது தொடர்பான வழக்கில் பங்கேற்பத்றகாக அவர் பிரித்தானியாவுக்கு வரலாம் என மூன்று மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளிக்க, நாடே கொந்தளித்தது.

அரசு வழக்கறிஞர்கள், ஷமீமா நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவர் எனவும், அதனால் அவரை நாட்டுக்குள் அனுமதிக்ககூடாது எனவும் கூறி வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனவே, ஷமீமா பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு முடிவு எடுக்கும்வரை, அவர் பிரித்தனியாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார் என்று தெரியவந்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதியான Sir James Eadie கூறும்போது, ஷமீமாவின் வயது காரணமாக அவர் மீது ஒரு இரக்கம் இருந்தாலும், அவர் தீவிரவாதிகளுடன் கைகோர்க்க முடிவு செய்திருந்தார்.

ஆகவே, அவரால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என அரசு முடிவுசெய்துள்ளது என்றார். ஆகவே, ஷமீமா பிரித்தானியாவுக்குள் நுழையும் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்