பிரித்தானிய கடற்கரையில் 15 அடி நீளமுள்ள ராட்சத கடல் மிருகம்? திகைத்து போன மக்கள்: வெளியான புகைப்படம்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் சுமார் 15 அடி நீளமுள்ள ராட்சத கடல் மிருகம் போன்று இருக்கும் உயிரினத்தின் புகைப்பத்தைக் கண்டு பலரும் திகைத்து போயுள்ளனர்.

பிரித்தானியாவின் Merseyside கடற்கரையில் கடந்த புதன் கிழமை, குறித்த கடல் மிருகம் காணப்பட்டது.

இது பார்ப்பதற்கே மிகவும் வினோதமாக உள்ளது. 15 அடி நீளம் கொண்ட இந்த உயிரினம் மீது மற்றொரு உயிரினம் இணைக்கப்பட்டுள்ளதைப் போன்று தெரிகிறது.

அது குட்டியின் தொப்புள் கொடியாக இருக்கலாம் அல்லது குட்டியை பெற்றெடுத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

(Image: Credit: Pen News)

குறித்த உயிரினத்தின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஒரு சிலர் இது ஒரு வகை திமிங்கலம் என்று குறிப்பிடுகின்றனர்.

ஆனால், இதைக் கண்ட இணையவாசிகள் யாராலும், அதை உறுதியாக அடையாளம் காண முடியவில்லை.

இன்னும் ஒரு சிலர் இது ஒரு மாடு அல்லது குதிரை என்று நினைக்கிறார்கள்.

(Image: Credit: Pen News)

32 வயது மதிக்கத்தக்க பெயரிட விரும்பாத நபர், இது மிகவும் மோசமாக வீசியது. அவை நோய்வாய் பட்டு கிடந்தது. இதன் காரணமாக நான் அதன் அருகில் நெருங்கவில்லை, நிறைய ஈக்க மொய்த்து கொண்டிருந்தன, துர்நாற்றம் வீசியது.

இந்த பகுதியில் ஒரு வேலை இருந்ததால், அப்போது இதைக் கண்டேன், முற்றிலும் மோசமாக சிதைந்துவிட்டது, சற்று வித்தியாசமாக இருக்கிறது. அடையாளம் காண முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இது குறித்து Natural England-ஐ சேர்ந்த ஒரு அதிகாரி அதன் உடல்களை ஆய்வு செய்ய இறங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் இது உண்மையில் கடல் மிருகமா? அல்லது வேறு ஏதுவுமா என்பது போக போகத் தான் தெரியும்.

(Image: Credit: Pen News/TD)

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்