லண்டனில் கடந்த வாரம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்த 18 இடங்கள் இது தான்! வெளியான பட்டியல்

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் கடந்த வாரம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்த 18 பகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனாவின் இரண்டாவது இலை வீசுவதற்கு வாய்ப்பிருக்கிறது. நாட்டில் வடக்கு பகுதியில் கொரோனா மீண்டும் பரவ துவங்கியுள்ளது.

இதன் காரணமாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் பல முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இந்நிலையில், நாட்டின் தலைநகரான லண்டனின் 18 பகுதிகளில் கொரோனாவின் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

ஏனெனில், பொது சுகாதார இங்கிலாந்து வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, தலைநகரின் 18 பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துள்ளது.

ஜூலை 21 மற்றும் ஜூலை 28 வரையிலான வாரங்களுக்கான கொரோனா வைரஸ் பாதிப்புகள் வாராந்திர வீதத்துடன் ஒப்பிடும்போது, ​​Hammersmith மற்றும் Fulham மிகப் பெரிய அதிகரிப்பைக் கண்டுள்ளது. இங்கு கொரோனா பாதிப்பு வழக்குகள் 3.8 முதல் 8.6 வரை உயர்ந்துள்ளன.

அதே போன்று Barking மற்றும் Dagenham-ல் கொரோனா பாதிப்பு 5.2 முதல் 9.9-ஆகவும், Brent-ல் 4.5 முதல் 9.1-ஆகவும் உயர்ந்துள்ளன.

Barnet, Camden மற்றும் Greenwich ஆகிய பகுதிகளிலும் கொரோனாவின் பாதிப்பு குறிப்பிட்ட அளவு உயர்ந்துள்ளது.

ஆனால், அதே சமயம் நாட்டில் 14 நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறைந்துள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

mylondon

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்