ஆசிய நாட்டவர்களால் தான் பிரித்தானியாவில் கொரோனா பரவுகிறது: அரசின் விதிகள் புரிவதில்லை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் ஆங்கிலம் பேச முடியாமல், அரசின் விதிகளை புரிந்து கொள்ளாமல் ஆயிரக்கணக்கான ஆசிய நாட்டவர்கள் தங்களை அறியாமலே கொரோனா பெருந்தொற்றை பரப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய சமூகத்துடன் ஒன்றிணையத் தவறிய ஆசிய நாட்டவர்களால் கொரோனா பெருந்தொற்று அதன் உச்சத்தை அடைந்ததாக இந்தியாவில் பிறந்து தற்போது பிரித்தானியாவில் குடியிருக்கும் வர்மா என்ற பெண்மணி குறிப்பிட்டுள்ளார்.

சில ஆசிய குடியிருப்பாளர்கள் சமூக இடைவெளி தொடர்பான அரசின் அறிவுறுத்தலை புரிந்துகொள்ள முடியாமல் தங்களையும் மற்றவர்களையும் ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அவர் நம்புகிறார்.

மட்டுமின்றி மொழிப்பிரச்சனையால் இன்னும் கூட பல ஆசிய நாட்டவர்கள் மிகவும் குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றுவதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுநோய் தற்போது தாம் குடியிருக்கும் நகரமான லீசெஸ்டரில் இந்த பிரச்சினையை வெளிச்சமிட்டு காட்டியதாக கூறும் வர்மா,

பலர் பல ஆண்டுகளாக இங்கு குடியிருந்துவருகின்றனர், ஆனால் அவர்களுக்கு ஆங்கில மொழித் திறன் இல்லாததால் கிடைக்கக்கூடிய திட்டங்கள் மற்றும் சேவைகள் மற்றும் தங்களுக்குரிய வாய்ப்புகளிலிருந்து விலக்கப்படுகிறார்கள் என்றார்.

தேர்தல்களின் போது, கட்சிகள் பல மொழிகளில் துண்டு பிரசுரங்களை அனுப்புகின்றன, ஆனால் கொரோனா நெருக்கடியின் போது அனைத்து விடயங்களும் ஆங்கிலத்தில் உள்ளன.

பிரித்தானிய குடிமக்கள் ஒவ்வொருவர் வீட்டிற்கும் பிரதமரிடமிருந்து கடிதத்தை அனுப்ப 5.8 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டன, ஆனால் அவை கிட்டத்தட்ட ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன.

லெய்செஸ்டரில் இரண்டாவது ஊரடங்கு நடவடிக்கை அமுலுக்கு கொண்டுவந்தபோது, வழங்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் அனைத்தும் ஆங்கில மொழியில் இருந்தன, வேறு எந்த மொழியிலும் இல்லை.

ஆசிய நாடுகளைச் சேர்ந்த கூட்டுக்குடும்பங்கள் பல இன்னமும் ஒன்றாகவே வசித்து வருகின்றனர்.

அவர்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் உணவு பண்டங்களை வாங்கவும், தங்கள் தாய்மொழியில் பேசவும் செய்கின்றனர்.

பல காலமாக பிரித்தானியாவில் குடியிருந்தும் அவர்களால் ஆங்கிலம் பேச முடியாமல் போனது அவர்கள் தவறல்ல, மாறாக உள்ளூர் நிர்வாகம் அவர்களை கண்டுகொள்வதில்லை என்பதே உண்மை என்கிறார் வர்மா.

மேலதிக தகவல்களுக்கு

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்