பிரித்தானியாவில் நடந்த சம்பவம்! திருமணமான 2 வாரத்தில் விதவையான பெண்: வேதனையுடன் சொன்ன தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் திருமணமான இரண்டு வாரத்தில் பெண் ஒருவர் விதவையான நிலையில், இவரின் இந்த நிலைக்கு காரணமான நபருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1-ஆம் திகதி Jevgenijs Kirilliovs என்ற 39 வயது நபர் Northants-ன் Daventry அருகே A45 சாலையில், Jaguar X-Type காரில் சென்று கொண்டிருந்த போது, அப்போது எதிர்பாரதவிதமாக, அந்த சாலையின் தவறான பக்கத்தில் Wierzbicki என்ற நபர் ஓட்டு வந்த லொரி, இந்த கார் மீது பயங்கரமாக மோதியது.

இதில் Jevgenijs Kirilliovs பரிதாபமாக உயிரிழந்தார். திருமணம் ஆன இரண்டு வாரத்திலே Jevgenijs Kirilliovs உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

(Image: SWNS)

இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையி, ஓட்டுனரான ஆபத்தான வகையில் வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து கடந்த வெள்ளிக் கிழமை, குறித்த நபருக்கு இரண்டு ஆண்டு மற்றும் 8 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த Jevgenijs Kirilliovs-ன் மனைவியும், விதவையுமான Giedre கூறுகையில், நான் என் கணவரை இழந்துவிட்டேன் என்பது மட்டுமல்லாமல், என் ஆத்ம துணையையும், எனது சிறந்த நண்பனையும், எங்கள் இரு குழந்தைகளின் தந்தையையும் இழந்துவிட்டேன் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

(Image: GoFundMe)

மேலும், அவர் ஒரு சிறந்த மனிதர், நாங்கள் மூன்று பேரும் ஒரு போதும், அவரது அன்பை சந்தேகிக்கவில்லை. அவர் எப்போதும் எங்களுடன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவார்.

நாங்கள் தான் எப்போதும் அவருடைய முன்னுரிமையாக இருந்தோம். எங்கள் குழந்தைகளுக்காக நாங்கள் எங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம். அவர் இறந்ததில் இருந்து, நரகத்தின் பின்னால் இருக்கிறோம். இந்த தனிமை மற்றும் சோகம் மிகப் பெரியது என்று வேதனையுடன் கூறி முடித்தார்.

Northamptonshire காவல்துறையைச் சேர்ந்த முன்னணி புலனாய்வாளர் DC Ady Tredwell கூறுகையில், அந்த நபருக்கு தண்டனை வழங்கப்படுவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இருப்பினும் மிகவும் விரும்பப்பட்ட நபரை நாம் இழந்திருக்கிறோம். இது எந்த நேரமும் அதை ஈடு செய்ய முடியாது.

இருப்பினும், அவர்கள் ஒரு சிறிய அளவிலான ஆறுதலைப் பெற முடியும் என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

(Image: GoFundMe)

Jevgenijs Kirilliovs மைத்துனர் Ausra Uzukauskaite, இது மிகவும் துயரமானது, அந்த நாள் அவர் வேலைக்குச் சென்றது அவரது திருமண விடுமுறையிலிருந்து வேலைக்குச் சென்ற முதல் நாள்.

அவர் மிகவும் ஆச்சரியமான அப்பா. ஒரு உண்மையான குடும்ப மனிதர். மிகவும் ஆரோக்கியமான மனிதர்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் தனது திருமணத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக கூறியுள்ளார். மேலும் இவரின் மரணத்திற்கு காரணமான ஓட்டுனருக்கு 40 மாதங்கள் வாகனம் ஓட்டவும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்