சீனாவில் இருந்து உலகெங்கும் அனுப்பப்படும் மர்ம பார்சல்: பிரித்தானியா உட்பட பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியா உட்பட பல்வேறு நாடுகளில் பொதுமக்களுக்கு கடந்த சில வாரங்களாக அஞ்சல் மூலம் மர்ம பார்சல் விநியோகிக்கப்பட்டு வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பார்சலானது சீனாவில் இருந்து அனுப்பப்படுவதாக மட்டுமே குறிப்பிட்டுள்ள நிலையில், அதன் உள்ளே விதைகள் மட்டுமே இருப்பதும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியா மட்டுமின்றி அமெரிக்கா, போர்த்துகல் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இந்த மர்ம விதை பார்சல் வலம் வருகிறது.

இதனிடையே, இந்த மர்ம பார்சல் தொடர்பில் அமெரிக்காவின் 50 மாகாணங்களுக்கும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, புளோரிடா மாகாணத்தில் மட்டும் 630 பார்சல் அஞ்சல் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

அதே வேளை பிரித்தானியாவிலும் சுமார் 100கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு இதே மர்ம பார்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த மர்ம விதைகளை பொதுமக்கள் எவரும் பயிரிட வேண்டாம் என அமெரிக்க வேளாண் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இனிமேலும் எவருக்கேனும் இதுபோன்ற விதை பார்சல் கிடைக்கப்பெற்றால் உடனடியாக உரிய நிர்வாகிகளை தெரியப்படுத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவிலும் தற்போது அதேபோன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளனர். பார்சலில் வரும் அந்த மர்ம விதைகளை பொதுமக்கள் பயிரிட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதனிடையே, சீன விதை நிறுவனம் ஏதேனும் தங்கள் பொருட்களுக்கான விளம்பரமாக கூட இது இருக்கலாம் என கூறப்படும் நிலையில்,

இந்த விவகாரம் தொடர்பில் சீனா வெளிவிவகார அமைச்சகம் நடவடிக்கை எடுக்கவும் உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்