சிறுமிகள் மீது மட்டும் ஈர்ப்பு! பிரித்தானியாவில் பல சிறார்களிடம் தவறாக நடந்து கொண்ட நபர்... அதிரவைக்கும் பின்னணி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் சிறுவர், சிறுமிகள் மீது ஈர்ப்பு கொண்டு 50க்கும் அதிகமான வழக்குகளில் 30 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நபர் மீது மேலும் 9 வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் கால்பந்து பயிற்சியாளரான Barry Bennellக்கு தற்போது 66 வயதாகிறது.

சிறுமிகள் மீது ஈர்ப்பு கொண்ட இவர் பலரை துஷ்பிரயோகம் செய்ததோடு பலரிடம் மோசமாக நடந்து கொண்டிருக்கிறார்.

கடந்த 1979 - 1988 வரையில் இவர் மீது பல புகார்கள் வந்தது. இதன் பின்னர் கைது செய்யப்பட்ட Barry Bennell மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.

இதையடுத்து கடந்த 2018ல் 50 குற்றங்களில் ஈடுபட்டதாக அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் 11 மற்றும் 14 வயதுடைய 2 சிறுமிகளிடம் மோசமாக நடந்து கொண்டதாக Barry மீது 9 பிரிவுகளின் கீழ் தனியாக வழக்குப்பதியப்பட்டது.

இந்த குற்றங்கள் தொடர்பான விசாரணை சமீபத்தில் வீடியோ அழைப்பின் மூலம் நடந்தது, இந்த நீதிமன்ற விசாரணையில் கலந்து கொண்ட Barry தனது குற்றங்களை ஒப்பு கொண்டுள்ளார்.

இதை தொடர்ந்து இந்த வழக்கை அக்டோபர் மாதம் வரை ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதாவது இந்த வழக்கில் தண்டனை விபரம் Barry க்கு அக்டோபரில் தான் அறிவிக்கப்படவுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்