பிரித்தானியாவில் கொரோனாவிற்கான பரிசோதனை, தடுப்பூசி திட்டம் குறித்து... அரசு முக்கிய தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் கொரோனாவிற்கான பரிசோதனை மற்று தடுப்பூசி விநியோகத்திற்கான திட்டத்தை மேம்படுத்தி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸின் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பு மருந்துகளை, கண்டறியும் ஆராய்ச்சியில், பிரித்தானியா, சீனா, ரஷ்யா இந்தியா, போன்ற பல்வேறு நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இதில் பிரித்தானியாவில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை தயாரிக்கும் பணிகளுக்கான திட்டத்தை மேம்படுத்துகிறது.

பிரித்தானிய அரசின் வழிகாட்டுதலின்படி, 90 நிமிடங்களில் கொரோனா வைரசினை கண்டறிவதற்கான சோதனை மற்றும் தடுப்பூசி விநியோகத்திற்கான நிரப்புதல் மற்றும் முடித்தல் போன்ற தகவல்கள் இன்று வெளியிடப்பட்டது.

பல்வேறு நாடுகளிலும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை திறன், மனித சோதனையில் உள்ளது.

இது பெரும்பாலும் முடியும் தருவாயில் உள்ளதால், நோய் எதிர்ப்பு திறன் கொண்ட தடுப்பூசி விரைவில் உறுதியாக நிரூபிக்கப்படும் என்னும் நம்பிக்கையில் இந்த ஒப்பந்தங்கள் எட்டப்பட்டது.

இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசியை ஆராய்ச்சி செய்வதற்கும், மேம்படுத்துவதற்கும் , தயாரிப்புக்கும் பிரித்தானியாவுக்கு திறன் உள்ளது என்பதை உறுதி செய்வது மிக முக்கியம்.

பிரித்தானியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டமக்களை விரைவாகவும் அதிக எண்ணிக்கையிலும் பாதுகாக்க தேவையான தடுப்பூசிகளை வழங்க உத்தரவாதம் அளிக்கிறோம் என கூறினார்.

கொரோனாவிற்கான 90 நிமிட பரிசோதனை தொடர்பாக சுகாதாரதுறை அமைச்சர் மாட் ஹான்காக் கூறுகையில், இது இரண்டு சோதனைகளின் ஒரு பகுதியாகும்.

கொரோனா வைரசிற்காக ஒன்றும், காய்ச்சலுக்காக மற்றொன்றும் ஆகும்.ஏனெனில் குளிர்காலம் துவங்குவதற்கு முன்பு, காய்ச்சல் மற்றும் பிற பருவகால நோய்களுக்குள், சோதனை திறனை அதிகப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மில்லியன் கணக்கான புதிய சோதனைகள் 90 நிமிடங்களுக்குள் சோதனையின் முடிவுகளை வழங்கும். இது விரைவான பரிமாற்ற சங்கிலியை உடைக்கும்.

இது மிகவும் பயனளிக்கும், எனவே நோயாளிகள் தங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்க சரியான ஆலோசனையைப் பின்பற்றலாம் என்று தெரிவித்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்