பிரித்தானியா அரசு ஆரம்பத்திலே இதை செய்யாதது ‘மிகப்பெரிய தவறு’..! அம்பலப்படுத்திய உள்துறை விவகாரக் குழு

Report Print Basu in பிரித்தானியா

கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய ஆரம்ப கட்டத்திலே பிரித்தானியா அரசு கடுமையான எல்லை நடவடிக்கைகளை அமல்படுத்தாதது மிகப்பெரிய தவறு என்று உள்துறை விவகாரக் குழு கூறியுள்ளது.

ஆரம்ப கட்டத்திலே நாட்டிற்குள் நுழைபவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தால், பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் திறம்பட தடுக்கப்பட்டிருக்கலாம்.

இத்தாலி மற்றும் ஸ்பெயினில் கொரோனாவால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்ட நேரத்தில் ஐரோப்பாவிலிருந்து வந்த எச்சரிக்கையை பிரித்தானியா அமைச்சர்கள் குறைத்து மதிப்பிட்டுள்ளனர் என்று உள்துறை விவகாரக் குழு கூறியுள்ளது.

பிப்ரவரி மற்றும் மார்ச் மாத தொடக்கத்தில், சீனா, ஈரான், தென் கொரியா மற்றும் பின்னர் இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து வந்த அனைத்து பயணிகளும் 14 நாட்கள் சுயமாக தனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

ஆனால் மார்ச் 13 அன்று அறிகுறிகளைக் காட்டாத வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு சுய-தனிமைப்படுத்தும் ஆலோசனையை முடிவுக்கு கொண்டுவந்தது ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்று உள்துறை விவகாரக் குழு தெரிவித்துள்ளது..

உள்துறை விவகாரக் குழுவின் கண்டுபிடிப்புகளை மறுத்த உள்துறை அலுவலக செய்தித் தொடர்பாளர், பிரித்தானியா அரசாங்கத்தின் முடிவுகள் அனைத்தும் அறிவியலால் முன்னெடுக்கப்பட்டன என்று கூறினார்.

உள்துறை விவகாரக் குழு என்பது உள்துறை அலுவலகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளின் பணிகளை ஆராய்வதற்கு பொறுப்பான அனைத்து கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழு ஆகும்.

குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் காவல்துறை உள்ளிட்ட பகுதிகளில் அரசாங்கத்தின் கொள்கை, செலவு மற்றும் சட்டத்தை இந்த குழு ஆராய்கிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்