உண்மையில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்? பிரித்தானியாவின் முன்னணி நிபுணர் பகிர்ந்த தகவல்

Report Print Basu in பிரித்தானியா

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எப்போது தடுப்பூசி கிடைக்கும் என தெரியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து பிரித்தானியா அரசாங்கத்தின் முன்னணி தொற்றுநோய் ஆலோசகர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தடுப்பூசி கிடைக்கும் என்றும், தடுப்பூசி கண்டுபிடிப்பில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்து வருவதாக முன்னணி நிபுணர் Sir Jeremy Farrar தெரிவித்துள்ளார்.

நான் ஈடுபட்டதிலிருந்து கடந்த ஏழு மாதங்களில், தடுப்பூசி உருவாக்குவதில் அடைந்த முன்னேற்றம் முற்றிலும் வியப்பூட்டுகிறது, இப்போது முதல் தயாரிப்பு தடுப்பூசிகள் உள்ளன.

அமெரிக்கா, ஐரோப்பா, சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து என அநேகமாக ஐந்து அல்லது ஆறு முதல் தயாரிப்பு தடுப்பூசிகள் இருக்கலாம், அவை சிகிச்சைக்கு கிடைக்கின்றன என்று அவர் கூறினார்.

இருந்தபோதிலும், முதல் தயாரிப்பு தடுப்பூசிகள் எல்லாவற்றையும் தீர்க்காது என்று அவர் எச்சரிக்கையுடன் வலியுறுத்தினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்