பெய்ரூட் வெடிவிபத்து... எனது பார்வையே பறிபோனதாக பயந்தேன்: உயிர் தப்பிய பிரித்தானியர் வெளியிட்ட தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் தமக்கு பார்வையே பறிபோய்விட்டது என அஞ்சியதாக பிரித்தானியர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

பெய்ரூட்டில் துறைமுகம் அருகே ஒரு கிடங்கில் சேமிக்கப்பட்டிருந்த சுமார் 2,750 டன் அளவுக்கு அம்மோனியம் நைட்ரேட் திடீரென்று வெடித்துச் சிதறியது.

வெல்டர் ஒருவரின் கவனக்குறைவால் இந்த பெரும் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் டசின் கணக்கிலான பிரித்தானியர்களும் சிக்கியுள்ளனர். இதுவரை 135 பேர் இந்த விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சுமார் 5,000 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். 300,000 பேர்கள் வீடிழந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து நடந்த பகுதிக்கும் ஒரு அரை மைல் தொலைவில் இரண்டாவது மாடியில் உள்ள தமது அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்துள்ளார் 58 வயதான ஆண்டி கெம்ப்.

வெடிவிபத்து ஏற்படவும், அந்த அதிர்வில் தங்களது அலுவலக கட்டிடத்தில் கண்ணாடி ஜன்னல் மொத்தமும் நொறுங்கியதாகவும், அதனால் ஏற்பட்ட காயத்தால் ஒரு நொடி தாம் பாற்வையே பறிபோனதாக அஞ்சியதாகவும் தெரிவித்துள்ளார்.

தமது இரு கண்களும் ரத்தத்தால் சிவந்து போயிருந்ததாகவும், காயம் காரணமாக தம்மால் எதை பார்க்க முடியவில்லை எனவும் ஆண்டி கெம்ப் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் பயங்கரவாத தாக்குதல் என்றே கருதியதாக கூறும் ஆண்டி கெம்ப், இரண்டாவது குண்டுவெடிப்பு தமது அலுவலகத்தை முற்றிலுமாக சேதப்படுத்தி தம்மை அறைக்குள் தூக்கி வீசியதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் வெளியே, தெருவுக்கு வந்த போது தான் அதிர்ச்சி காத்திருந்ததாக கூறும் அவர், அதுபோன்ற ஒரு நிலையை கடந்த 20 ஆண்டு கால பெய்ரூட் வாழ்க்கையுல் இதுவரை தாம் பார்த்ததில்லை என்றார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்