மேகன் மெர்க்கல் குறித்து அப்போதே எச்சரித்தேன்: இளவரசர் ஹரியின் நெருங்கிய நண்பர் வெளியிட்ட தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

மேகன் மெர்க்கல் தொடர்பில் தமது சந்தேகத்தை வெளிப்படுத்திய காரணத்தால், இளவரசர் ஹரி தமது திருமணத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை என மிக நெருங்கிய நண்பர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

ஏடன் கல்லூரியில் இளவரசர் ஹரியுடன் ஒன்றாக பயின்றவர் Tom 'Skippy' Inskip. இவரே தமது நெருங்கிய நண்பரான ஹரியிடம் நிச்சயதார்த்தம் நடப்பதற்கு முன்னால் மேகன் மெர்க்கல் மீதான தமது சந்தேகத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

மட்டுமின்றி திருமணம் உள்ளிட்ட முக்கிய முடிவுக்கு செல்லும் முன்னர் இருவரும் கொஞ்ச நாட்கள் ஒன்றாக வாழ்ந்து பாருங்கள் எனவும் அவர் அறிவுரை கூறியுள்ளார்.

ஒரு நலம்விரும்பி என்ற முறையில் கூறப்பட்ட இந்த அறிவுரையானது இளவரசர் ஹரியை காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி இதே கருத்தை இளவரசர் வில்லியம் கூட ஹரியிடம் தெரிவித்ததாகவும், காமம் கண்களை குருடாக்கிவிட்டதா என தமது ஆதங்கத்தை இளவரசர் வில்லியம் பகிர்ந்து கொண்டதாகவும்,

ஆனால் சுயநலவாதி எனும் பொருள்படும் வார்த்தையை இளவரசர் ஹரி வில்லியத்திடம் பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டது.

தற்போது ஹரியின் நெருங்கிய நண்பருக்கும் அதே நிலை தான் ஏற்பட்டுள்ளது. ஹரி - மேகன் திருமணத்திற்கும் வரவேற்பு விழாவுக்கும் Tom 'Skippy' Inskip மற்றும் அவரது மனைவிக்கு இளவரசர் ஹரி சார்பில் அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

Skippy தற்போது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் குடியிருக்கிறார். அங்குள்ள பெரிய நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

கடந்த ஆண்டு அவரது மாமியார் இறந்த பின்னர் ஏற்பட்ட கடுமையான உளவியல் பிரச்சினைகளைத் தொடர்ந்து இளவரசர் ஹரியுடன் சமரசம் செய்து கொண்டார் எனவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Skippy என நண்பர்கள் மத்தியில் பரவலாக அறியப்படும் இவரே, 2012 ஆம் ஆண்டு லாஸ் வேகஸ் நகர ஹொட்டல் ஒன்றில் இளம்பெண்கள் முன்னிலையில் இளவரசர் ஹரி பில்லியர்ட்ஸ் ஆடியபோது உடன் இருந்தவர்.

இளவரசர் ஹரியுடன் சில விவாத பார்ட்டிகளில் உடன் காணப்பட்ட நபரும் இவரே.

மட்டுமின்றி 2017-ல் Skippy-ன் திருமணத்தின் போதே இளவரசர் ஹரியுடன் முதன் முறையாக மேகன் மெர்க்கல் காணப்பட்டார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்