லண்டன் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் போதைப் பொருட்கள்! புகைப்படத்துடன் பின்னனி தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் இரண்டு நபர்களின் வீடுகளில் பொலிசார் சோதனையிட்டதில் கட்டுகட்டாக பணம், போதை பொருட்கள் கிடைத்த நிலையில் இருவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Jody Hall (46) மற்றும் Harry El Araby (33) ஆகிய இருவருக்கும் தான் Woolwich Crown நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதில் Jody வீட்டில் இருந்து துப்பாக்கிகள், கொக்கைன் போதை மருந்துகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டது.

போதை மருந்துகள் மற்றும் துப்பாக்கி விற்பனையில் Jody ஈடுபட்டது தெரியவந்தது. இந்த குற்றத்துக்காக அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அதே போல Harry வீட்டில் இருந்து துப்பாக்கிகள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பொலிசார் கூறுகையில், கடந்த மே மாதம் சந்தேகத்தின் பேரில் Jody-ஐ பின் தொடர்ந்தோம்.

அவரும் Harryம் சந்தித்து கொண்டு போதை மருந்துகள், ஆயுதங்களை மாற்றி கொண்டார்கள்.

இதையடுத்து இருவரையும் பிடித்தோம், பின்னர் அவர்கள் வீட்டில் சோதனை செய்த போது மொத்தமாக £14,000 பணம், போதை மருந்துகள், வெடி மருந்துகள், துப்பாக்கிகள் இருந்தது.

லண்டனில் ஆபத்தான ஆயுதங்கள், சட்டவிரோத போதைப்பொருட்கள், அதன் மூலம் பெறப்பட்ட பணம் ஆகியவற்றை அகற்றுவதற்கான முயற்சியில் தொடர்ந்து முழு மூச்சுடன் ஈடுபடுவோம் என கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்