பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த குடும்பம்! அடுத்தடுத்து கணவன், குழந்தையை பறிகொடுத்த இளம்பெண்.. கண்ணீர் பின்னணி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த பெண்ணின் 6 வயது மகன் விளையாடி கொண்டிருந்த போது அவன் மீது கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

தெற்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்டவர் Zufan Yemane (30). இவருக்கு 11 வயதில் Jossy மற்றும் 6 வயதில் Kidus Wendosen என இரண்டு மகன்கள் உள்ளனர்.

Zufan குடும்பத்துடன் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த நிலையில் Manchester- வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று தனது வீட்டு வாசலில் Kidus விளையாடி கொண்டிருந்தான். அப்போது ஒரு கார் Kidus மீது வேகமாக மோதியது, இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் தாயார் Zufan கூச்சலிட்டார்.

பின்னர் Kidus மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

இந்த சம்பவம் தொடர்பாக 32 வயது பெண்ணை பொலிசார் கைது செய்தனர்.

காரை கவனக்குறைவாக ஓட்டியதாக அவர் மீது வழக்கு செய்யப்பட்டது, பின்னர் அப்பெண் விடுவிக்கப்பட்ட நிலையில் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Zufan கூறுகையில், மிகவும் சுறுசுறுப்பாக சிறுவனாக Kidus வலம்வந்தான். எங்கள் வீட்டு பகுதியில் இருப்பவர்கள் அனைவருக்கும் Kidus-ஐ தெரியும்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் மீது கார் மோதியதை கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.

என்னுடைய 34 வயது கணவர் கடந்தாண்டு தூக்கத்திலேயே திடீரென இறந்துவிட்டார், இப்போது என் மகனையும் பறிகொடுத்துவிட்டேன், நான் மிகவும் வேதனையில் உள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்