பிரித்தானியாவில் பொலிஸ் அதிகாரிகள் போல ஏமாற்றி லட்சக்கணக்கில் மக்களிடம் நடந்த பண மோசடி! எச்சரிக்கை தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனை சேர்ந்த சில மோசடி நபர்கள் தங்களை காவல்துறை அதிகாரிகள் போல காட்டி கொண்டு பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்த சம்பவம் தொடர்பில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி கடந்த மே மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரையில் பலரிடம் £37,000 பணம் வரை ஏமாற்றி பறிக்கப்பட்டுள்ளது.

அதாவது சில மர்ம நபர்கள் தங்களை காவல்துறை அதிகாரிகள் என போனிலோ அல்லது நேரிலோ பொதுமக்களிடம் கூறியுள்ளனர்.

வழக்கு தொடர்பாக விசாரிக்க பணம் அனுப்பவேண்டும் என பொதுமக்களை ஏமாற்றி அவர்களிடம் பணத்தை வாங்கியுள்ளனர்.

இந்த மோசடியில் தொடர்புடைய இளைஞனின் சிசிடிவி புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர், அவனுக்கு அனைத்து மோசடியிலும் தொடர்பிருக்கும் என கருதப்படுகிறது.

அந்த நபர் லண்டனை சேர்ந்தவர் எனவும் லண்டனின் King’s Cross train stationல் இருந்து Norfolkல் உள்ள Downham Marketக்கு சென்று மக்களிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளார் எனவும் பொலிசார் கருதுகிறார்கள்.

பொலிஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், எல்லோரும் கவனத்தில் கொள்ளுங்கள், பொலிசார் எந்த சூழலிலும் உங்கள் வங்கிக்கணக்கு விபரங்களை நேரிலோ அல்லது போனிலோ கேட்க மாட்டார்கள்.

அதே போல விசாரணை தொடர்பாக பணமும் கேட்க மாட்டார்கள், இது போன்ற மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம் என கூறியுள்ளனர்.

சிசிடிவி புகைப்படத்தில் உள்ள நபர் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக தங்களை தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்