புது காதலருடன் பாகிஸ்தானுக்கு சென்று குடியேற திட்டமிட்ட பிரித்தானிய இளவரசி டயானா!.. வெளியான தகவல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
2408Shares

பிரித்தானிய இளவரசி டயானா, தனது காதலரான பாகிஸ்தானிய இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரை மணந்துகொண்டு பாகிஸ்தானுக்கே சென்று குடியேற திட்டமிட்டதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தனது இறுதி நாட்களில் பாகிஸ்தானியரான Hasnat Khan என்னும் ஒருவரை காதலித்துள்ளார் டயானா.

டயானா கென்சிங்டன் மாளிகையில் வசிக்கும்போதே, யாருக்கும் தெரியாமல் Hasnat Khanஐ தனது காரின் பின் பகுதிக்குள் மறைந்து வைத்து அழைத்துவருவாராம் டயானாவின் தனிப்பட்ட சமையல் கலைஞரான Paul Burrell.

இருவரும் யாருக்கும் தெரியாமல் சந்தித்துக்கொள்வார்களாம். அப்படிப்பட்ட சூழலில், விவாகரத்தும் ஆகிவிட, Hasnat Khanஐயே திருமணம் செய்ய முடிவு செய்த டயானா, தனது தோழியான ஜெமைமாவிடம் ஆலோசனை கேட்பாராம்.

ஜெமைமா, பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கானின் மனைவி... (அப்போது இம்ரான் கான் பிரதமராகவில்லை, அவர் பிரதமராகும்போது ஜெமைமா அவரது மனைவியாகவும் இல்லை).

ஒரு பிரித்தானிய பெண்ணாக இருந்துகொண்டு ஒரு பாகிஸ்தானியரை திருமணம் செய்துகொண்டு வாழும் ஜெமைமாவிடம், தானும் அதேபோல் ஒரு பாகிஸ்தானியரை திருமணம செய்துகொள்ள திட்டமிட்டிருப்பதால் நீண்ட நேரம் அது குறித்து பேசிக்கொண்டிருப்பாராம் டயானா.

ஆனால், அந்த திட்டத்தில் விதி வேறு மாதிரி விளையாடிவிட்டது! 1997ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கே ஜெமைமாவுடன் சென்ற டயானா, Hasnat Khanஇன் பெற்றோரை சந்தித்து இது தொடர்பாக பேசியிருக்கிறார்.

Hasnat Khan இந்த விடயங்களை ரகசியமாக வைக்க திட்டிமிட்டிருந்த நிலையில், விடயம் பத்திரிகைகளில் எல்லாம் வந்து உலகின் கவனத்தை ஈர்த்துவிட, அதை விரும்பவில்லை அவர்.

பின்னர், Hasnat Khanம் டயானாவும் பிரிந்துவிட்டார்கள். அந்த கோபத்தில்தான் டயானா டோடி என்பவருடன் பழகியிருக்கிறார்.

அப்போது, வேண்டுமென்றே, தான் டோடியுடன் இருக்கும்போது புகைப்படக்காரர்களை புகைப்படம் எடுக்க அனுமதிப்பாராம் டயானா.

அந்த புகைப்படங்களைக் கண்டு Hasnat Khanக்கு பொறாமை வரட்டும் என்பதற்காக அப்படி செய்வாராம் டயானா.

அதேபோல், Hasnat Khanம் கோபப்பட்டிருக்கிறார், போயும் போயும் ஒரு பிளேபாயுடனா சேர்ந்திருக்கிறாள், இது என் டயானாவே அல்ல என்று ஆத்திரப்படுவாராம் அவர்.

கடைசியாக கார் விபத்தில் உயிரிழக்கும்போது இந்த டோடியுடன் தான் இருந்தார் டயானா என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்