பிரித்தானியாவின் பிரபலமான சாண்ட்விச் தயாரிக்கும் நிறுவனத்தின் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பலருக்கு கொரோனா உறுதியானது.
கிழக்கு மிட்லாண்ட்ஸ், நார்தாம்ப்டனில் உள்ள தனது தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பலருக்கு கொரோனா உறுதியானதாக Greencore நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இப்பகுதியில் கொரோனா வழக்குகள் அதிகரித்த பின்னர் அதன் நார்தாம்ப்டன் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவரையும் முன்கூட்டியே சோதனை செய்ய முடிவு செய்ததாக Greencore தெரிவித்துள்ளது.
தொழிலாளர்களுக்கு மேற்கொண்ட கொரோனா சோதனையில் பலருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியானது, இப்போது அவர்கள் அனைவரும் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
கடந்த நான்கு வாரங்களாக பெருநகரங்கள் அதிக எண்ணிக்கையிலான வழக்குகளை சந்தித்து வருவதாகவும், உள்ளூர் ஊரடங்கை தவிர்க்க முதலாளிகள் இப்போதே செயல்பட வேண்டும் என Northamptonshire கவுன்டி கவுன்சிலின் பொது சுகாதார இயக்குனர் லூசி வைட்மேன் கேட்டுக்கொண்டார்.