பிரித்தானியாவில் தாயின் பையில் இருந்து ஆணுறைகளை கண்டுபிடித்த 19 மாத குழந்தை! கமெராவில் சிக்கிய காட்சி

Report Print Santhan in பிரித்தானியா
4256Shares

பிரித்தானியாவில் தாயின் குட்டி பையில் இருந்து ஆணுறைகளை கண்டுபிடித்த குழந்தை அதை தர மறுக்கும் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

பிரித்தானியாவின் Chester-ஐ சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க Maisey Davison என்ற தாய், கருத்தடை மாத்திரைக்காக மருத்துவரிடம் சென்றுள்ளார். அப்போது அவருக்கு ஆணுறைகளுடன் கொண்ட இலவச காகித பை கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரின் 19 வயது மகளான Isabella அந்த பையில் இருந்த ஆணுறைகளை கையில் எடுத்து வைத்துள்ளார்.

இதைக் கண்ட Maisey Davison அவரிடம் ஆணுறைகளை கேட்க, அவர் கொடுக்க மறுக்கிறார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்து Maisey Davison கூறுகையில், நான் எனது மருத்துவர்களிடமிருந்து எனது கருத்தடை மாத்திரையை எடுக்கச் சென்றேன், அப்போது அதனுடன் சேர்ந்து அவர்கள் ஒரு காகித பை ஆணுறைகளை கொடுத்தார்கள்.

All mine (Picture: Jam Press)

நான் அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் என் பையில் வைத்துவிட்டேன். இதை என் மகள் கண்டுபிடித்து, அதை எடுத்து வைத்து கொண்டு தர மறுத்தாள்.

இதனால் இறுதியாக நான் அவளிடம் சில விளையாட்டு பொம்மைகளை காண்பித்து அதை பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த காட்சியை வீடியோ எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து பதிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வரை 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும், 1800-க்கும் மேற்பட்ட லைக்குளையும் பெற்றுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்