எங்களுக்கு இதை தவிர வேறு வழியில்லை.. பிரான்ஸை பட்டியலில் சேர்த்ததற்கு இது தான் காரணம்! நிலைமைய விளக்கிய பிரித்தானியா

Report Print Basu in பிரித்தானியா

சனிக்கிழமை முதல் பிரான்ஸ், நெதர்லாந்து உட்பட 4 நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு வரும் அனைவரும் 14 நாள் தனிமைப்படுத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது குறித்து நாட்டின் போக்குவரத்துச் செயலாளர் விளக்கமளித்துள்ளார்.

சனிக்கிழமை 04:00 மணிக்குப் பிறகு பிரான்ஸ், நெதர்லாந்து, மொனாக்கோ, மால்டா, டர்க்ஸ்-கைகோஸ் மற்றும் அருபா ஆகிய நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு வரும் அனைவரும் 14 நாள் சுயமாக தனிமைப்படுத்த வேண்டும் என பிரித்தானியா அரசு உத்தரவிட்டுள்ளது.

பிரித்தானியா எடுத்த முடிவால் நாங்கள் வருந்துகிறோம், இது ஒரு பரஸ்பர நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என பிரான்ஸ் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்தில் இருந்து வருகை தரும் அனைவருக்கும் 14 நாள் தனிமைப்படுத்தலை விதிப்பது தவிர பிரித்தானியாவுக்கு வேறு வழியில்லை என்று போக்குவரத்துச் செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை தொடர்ந்து மாறும், தற்போதைய சூழ்நிலையில் பொது சுகாதாரம் மற்றும் பொது பாதுகாப்பைப் பாதுகாப்பதே எங்கள் விருப்பம்.

இந்த நாடுகளில் சமீபத்திய நாட்களில் கொரோனா வழக்குள் தொடர்ந்து அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம், பின்னர் இது போன்ற நடவடிக்கைகளை செயல்படுவதைத் தவிர வேறு வழியில்லை என போக்குவரத்துச் செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்