லண்டனில் குளியலறையை சுத்தம் செய்த பின்னர் சுருண்டு விழுந்த இளம்பெண் மரணம்! நடந்தது என்ன? எச்சரிக்கை தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் குளியலறையை சுத்தம் செய்த பெண் சில நிமிடங்களில் கீழே சுருண்டு விழுந்து பின்னர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது தொடர்பில் அவர் தாயார் எச்சரித்துள்ளார்.

லண்டனின் Feltham-ஐ சேர்ந்தவர் Celia Seymour. இளம்பெண்ணான இவர் Atlantico Hand Car Wash நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் வீட்டு குளியலறையை சுத்தம் செய்த Celia-வுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதன்பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Celia செயற்கை கோமாவில் வைக்கப்பட்ட நிலையில் 4 நாட்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து Celiaவின் தாயார் கூறுகையில், என் அன்பு மகளை இழந்துவிட்டேன், அவர் ஆஸ்துமாவால் உயிரிழந்துள்ளார்.

நான் எல்லோருக்கும் எச்சரிப்பது என்னவென்றால், bleach உடன் சுத்தம் செய்யும் வேறு பொருட்களை கலக்காதீர்கள், அது தான் Celiaவின் உயிரை பறித்துவிட்டது என கூறியுள்ளார்.

இந்த நிலையில் Celia பணிபுரிந்த நிறுவனத்தின் உரிமையாளர் Peter Seferi அவர் நினைவாக தனது நிறுவனத்தின் பெயரை Celia’s Hand Car Wash என மாற்றி உயிரிழந்தவருக்கு மரியாதை செய்துள்ளார்.

Peter Seferi கூறுகையில், சம்பவத்தின் போது நானும் Celia வீட்டில் தான் இருந்தேன், நான் கீழ்தளத்தில் இருந்த நிலையில் குளியலறையை சுத்தம் செய்துவிட்டு வருவதாக என்னிடம் அவர் சொன்னார்.

பின்னர் நான் மேலே சென்ற போது குளியலறையை Celia சுத்தம் செய்த பொருட்களின் நாற்றம் மிக அதிகமாக வீசியது.

இதையடுத்து நானும் Celiaவும் வெளியில் வந்தோம், அப்போது தனக்கு மூச்சு விட சிரமமாக இருப்பதாக அவர் என்னிடம் சொன்னார், பின்னர் சில நிமிடங்களில் கீழே சுருண்டு விழுந்துவிட்டார்.

இதன் பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் Celiaவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம் என கூறியுள்ளார்

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்