உயிர் போகும் நிலையில் அலறிய 12 வயது சிறுமி! அவரை காப்பாற்றாமல் சிலர் செய்த மோசமான செயல்... நடந்தது என்ன?

Report Print Raju Raju in பிரித்தானியா
268Shares

ஸ்காட்லாந்தில் 12 வயது சிறுமி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அவரை காப்பாற்ற முயற்சிக்காமல் வீடியோ எடுத்தவர்களை உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தார் கடுமையாக சாடியுள்ளனர்.

Ava Gray என்ற 12 வயது சிறுமி அங்குள்ள ஆற்றில் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து குளிக்க சென்றார்.

அப்போது நீரில் மூழ்கி Ava Gray உயிரிழந்தார், சிறுமி உயிரிழந்தது அவர் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Ava Grayn இறுதிச்சடங்கு நடந்துள்ள நிலையில் குடும்பத்தார் அவர் குறித்து பேசியுள்ளனர்.

அவர்கள் கூறுகையில், Ava Gray-ஐ காப்பாற்ற ஒரு நபர் மட்டும் முயன்றிருக்கிறார், அவருக்கு நாங்கள் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

அதே சமயம் Ava Grayன் அலறல் சத்தம் கேட்டு அவரை காப்பாற்றாமல் பலரும் வீடியோ எடுப்பதிலேயே குறியாக இருந்துள்ளனர்.

இதில் சிலர் அவளை காப்பாற்ற முயன்றிருந்தால் கூட நாங்கள் அவரை இழந்திருக்க மாட்டோம்.

மேலும் ஓன்லைனிலும் பலரும் மோசமாக கருத்துக்களை கூறி வருவது வேதனையளிக்கிறது. தண்ணீரின் ஆபத்துகள் குறித்து தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அனைவரும் கற்பிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்