பிரித்தானியாவில் இது கட்டாயமாக்கப்படுமா? பெரும்பாலும் இதனால் தான் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்: சுகாதார செயலாளர் விளக்கம்

Report Print Basu in பிரித்தானியா
365Shares

பிரான்ஸை தொடர்ந்து பிரித்தானியாவில் பணியிடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படுமா என்பது குறித்து சுகாதார செயலாளர் விளக்கமளித்துள்ளார்.

பிரான்ஸில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 1ம் திகதி முதல் பணியிடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படுவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், பிரித்தானியாவில் பணியிடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்குவது குறித்து அரசு பரிசீலிக்கவில்லை என்று சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.

NHS-ன் சோதனை மற்றும் தடமறிதலிருந்து தற்போது கிடைத்த ஆதாரங்கள் படி, மக்கள் பெரும்பாலும் மற்றொருவர் வீட்டிற்கு சென்று சந்திக்கும் போது கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை காட்டுகிறது.

பிரித்தானியா அரசாங்கம் அறிவியல் ஆதாரங்களை தொடர்ந்து கவனித்து கொண்டிருக்கிறது, பணியிடங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் அளவு ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கிறது என மாட் ஹான்காக் கூறினார்

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்