லண்டனில் விதவை வீட்டுக்கு வந்து அவர் கையை கடித்து விலையுயர்ந்த பொருளை திருடிய இளம்பெண்! வெளியான பின்னணி

Report Print Raju Raju in பிரித்தானியா
471Shares

லண்டனில் வயதான விதவை பெண்ணின் கையை கடித்து அவரின் திருமண மோதிரத்தை திருடிய இளம்பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Monique Roach (24) என்ற இளம்பெண் லண்டனின் Hackney பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி சென்று கதவை தட்டியுள்ளார்.

இதையடுத்து 75 வயதான விதவை பெண் கதவை திறந்தார், அப்போது Monique அவரிடம் அழுது கொண்டே தனக்கு அவசரமாக பத்து பவுண்டுகள் வேண்டும் என கூறினார்.

அவர் மீது சந்தேகம் கொண்ட மூதாட்டி கதவை மூட முயன்ற போது அதை தடுத்த Monique மூதாட்டியின் கையை கடித்தார், பின்னர் அவர் விரலில் இருந்த விலையுயர்ந்த திருமண மோதிரத்தை எடுத்து கொண்டு தப்பியோடினார்.

இதன்பின்னர் 50களில் உள்ள ஆண் நபரை மிரட்டி பணம் கேட்டுள்ளார்.

அவர் பணம் கொடுக்க மறுத்த நிலையில் நீ என்னை அடித்தாய் என பொலிசில் புகார் கொடுப்பேன் என மீண்டும் மிரட்டிய நிலையில் அந்த நபர் Monique-க்கு £105 கொடுத்திருக்கிறார்.

இந்த இரண்டு சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் Monique-ஐ கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி கைது செய்தார்கள்.

அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் தற்போது 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மோதிரத்தை திருடியதற்கு 6 ஆண்டுகளும், நபரை மிரட்டியதற்கு 1 ஆண்டு என பிரித்தே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொலிசார் கூறுகையில், Moniqueன் செயலால் பாதிக்கப்பட்ட பெண் மிகவும் அதிர்ச்சியடைந்ததோடு, தனது பாதுகாப்பை நினைத்து பயந்தார்.

Moniqueவின் மிக மோசமான செயலை ஏற்று கொள்ளவே முடியாது என கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்