பிரித்தானியாவில் திடீரென நிறுத்தப்பட்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி... மூடப்பட்ட இந்திய உணவகம்: பின்னணி

Report Print Balamanuvelan in பிரித்தானியா
1534Shares

பிரித்தானியாவின் பிளாக்பர்ன் பகுதியில் அமைந்துள்ள இந்திய உணவகம் ஒன்று உள்ளூர் கவுன்சிலால் மூடப்பட்டது.

Waheed's Buffet and Banqueting Hall என்ற அந்த உணவகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடப்பதை அறிந்த பொலிசார் அங்கு விரைந்துள்ளனர்.

அங்கு 100 முதல் 120 பேர் கூடியிருப்பதைக் கண்ட பொலிசார், உடனடியாக அவர்களை கலைந்து செல்லும்படி உத்தரவிட்டுள்ளனர்.

உடனடியாக அந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி நிறுத்தப்பட, அதில் கலந்துகொண்டவர்கள் கலைந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில், உணவகத்தின் மேலாளரான Abdul Toheed, நடந்த சம்பவம் வருத்தத்தை அளிக்கிறது, காரணம், உணவகத்தில் இருந்தவர்கள் அனைவரும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வந்தவர்கள் அல்ல, அவர்களில் பலர் தனித்தனியாக உணவு உண்ண வந்த வாடிக்கையாளர்கள்.

நாங்கள் சமூக விலகல் விதிகளை பின்பற்றித்தான் வருகின்றோம். சொல்லப்போனால், அதிக வாடிக்கையாளர்கள் வந்ததைத் தொடர்ந்து, அந்த அதிக வாடிக்கையாளர்கள் வேறொரு அறைக்கு அனுப்பப்பட்டு அங்கு அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது என்று கூறியுள்ளார்.

ஆனால், பிளாக்பர்னில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 30 பேர் வரை மட்டுமே கலந்துகொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்