பிரித்தானியாவில் டெலிவரி கொடுத்த வந்த இளைஞன் செய்த அருவருக்கதக்க செயல்! கமெராவில் சிக்கிய காட்சி

Report Print Santhan in பிரித்தானியா
3922Shares

பிரித்தானியாவில் டெலிவரி கொடுக்க வந்த இளைஞன், இந்த கொரோனா சமயத்தில் மிகவும் மோசமாக, அறுவறுக்கத் தக்க வகையில் நடந்து கொண்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் நட்டிங்கமின் Rise Park-ல் இருக்கும் Shenfield Gardens-ல் வசித்து வருபவர் John Carr.

இவர் கடந்த 13-ஆம் திகதி FedEx-ல் சிறந்த டெலிவரி ஒன்றை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்துள்ளார். ஆனால் மறுநாள் காலை 14-ஆம் திகதி அந்த டெலிவரி கொண்டுவரப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் தன்னுடைய Google Nest camera-வில் பார்க்கும் போது வெறுப்படைந்துள்ளார். ஏனெனில் அவர் அன்றைய தினம் வீட்டில் இல்லை.

இருப்பினும் தன்னுடைய வீட்டை யாரேனும் நெருங்கும் போது, Google Nest camera-வில் பதிவாகும் வீடியோ காட்சி, எச்சரிக்கை பதிவாக அப்படியே பதிவு செய்யப்பட்ட நபருக்கு செல்லும்.

அதன் படி அன்று டெலிவரி நபர் காரில் இருந்து இறங்கி வந்து டெலிவரி கொடுப்பதற்காக வீட்டை நெருங்கிய போது, இவருக்கு போனில் எச்சரிக்கை மெசேஜ் கிடைத்துள்ளது.

இதையடுத்து போனை திறந்து பார்த்த போது, டெலிவரி கொடுக்க வந்த நபர், வீட்டின் அருகே குப்பை தொட்டி எதுவும் என்று பார்க்காமல் அந்த இடத்திலே அப்படியே எச்சிலை துப்புகிறார்.

இந்த கொரோனா எளிதாக பரவும் நேரத்தில் அவர் இப்படி செய்தது John Carr-க்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் வீட்டிற்கு வந்து அதை கம்ப்யூட்டரில் பார்த்த போதும், அப்படியே பதிவாகியுள்ளது. இதனால் John Carr இது குறித்து புகார் தெரிவிப்பதற்காக விற்பனையாளர் மற்றும் டெலிவரி செய்யப்பட்ட FedEx என இரண்டையும் தொடர்பு கொண்டுள்ளார்.

இதில் FedEx நிறுவனம், தங்களை மீண்டும் அழைப்பதாக கூறியுள்ளனர். ஆனால் வெகு நேரம் ஆகியும் அழைக்கவில்லை, அதன் பின் நீண்ட நேர தாமதத்திற்கு பிறகு மேலாளர் விடுமுறையில் இருந்ததால் மின்னஞ்சலை பார்க்கவில்லை என்று கூறியுள்ளனர்.

இதனால் John Carr இது ஒரு மோசமான வாடிக்கையாளர் சேவை என்று குறிப்பிட்டுள்ளார்.

இது பார்க்கும் போது ஒரு எச்சில் துப்புவது தானே என்று இருந்தாலும், இப்போது இருக்கும் இந்த கொரோன சூழ்நிலையில், இது பலருக்கும் ஒரு வித பயத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்